விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேகலையால் குறைவு இல்லா*  மெலிவு உற்ற அகல் அல்குல்,* 
    போகமகள் புகழ்த் தந்தை*  விறல் வாணன் புயம் துணித்து,* 
    நாகமிசைத் துயில்வான்போல்*  உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,* 
    யோகு அணைவான் கவராத*  உடம்பினால் குறைவு இலமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மே கலையால் - உடையழகினால்
குறைவு இல்லா - குறையற்றவளும்
மெலிவு உற்ற - ஸூகுமாரத்தன்னை பெருந்தியவளும்
அகல் அல்குல் - அகன்ற சிதம்ப ப்ரசேதத்தை யுடையவளும்
போதன் - போகத்திற்கு யெனளுமான

விளக்க உரை

(மேகலையால்) வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள். “மேகலையால் குறைவில்லா” என்பது பானாஸூரபுத்ரியான உஷைக்கு அடையொழி. மேகலை என்பதைக் கீழ்ப்பாசுரத்திற்போலே என்னும் வடசொல்லன் திரிபாகக்கொள்;ளவுமாம்; அன்றி, ‘மேதலையால்’ என்று இரண்டு சொல் வடிமாகக்கொண்டு, விரும்பத்தக்க (கலை) வஸ்த்ரத்தினால் என்று கொள்ளவுமாம். “நம்பும் மேவும் நசையாகும்மே” என்பது தொல்காப்பியம். மேம்பாடுடைய கலையினால் என்னவுமாம். “உஷைக்குக் கூறையுடை அழகியதாயிருக்கும்போலேகாண்” என்பராம் வங்கிப் புரத்து நம்பி. அல்குல்-மத்யப்ரதேசம். அல்குமென்று பெண்குறியையே சொல்லுவதாகப் பலர்பிரமித்திருப்பதுண்டு. திருக்கோவையர் முதலிய நூல்களில் சிற்சிலவிடங்களில் அப்பொருளில் பிரயோகம் கண்டாலும் அருளிச்செயல்களில் காண்கிற பிரயோகம் அப்பொருளில் அல்ல. “திருமலிந்து திகழ்மார்வு தேக்கந்தென்னால்குலேறி” என்ற பெரியாழ்வார் திருமொழியும் “பூந்துகில் சேரல்குல்” என்ற பெருமாள் திருமொழியும் முதலாயின காண்க்.

English Translation

The Lord who cut asunder the arms of the mighty Bana,-father of slehder-waisted jewel-betted Usha, - lies oh a serpent-bed, engaged in Yoga to ensure the world's good. If the does not desire my body, we have nothing to lose

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்