விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலக்கிய மா மனத்தனளாய்க்*  கைகேசி வரம் வேண்ட* 
    மலக்கிய மா மனத்தனனாய்*  மன்னவனும் மறாது ஒழியக்*
    குலக்குமரா! காடு உறையப் போ என்று*  விடை கொடுப்ப* 
    இலக்குமணன் தன்னொடும்*  அங்கு ஏகியது ஓர் அடையாளம்*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கைகேசி - கைகேயியானவள்
கலக்கிய மா மனத்தனன் ஆய் - (மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்
வரம் வேண்ட - (தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக்கேட்க
மலக்கிய - (அக்கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த
மா மனத்தனன் ஆய் - சிறந்த மனத்தையுடையவனாய்

விளக்க உரை

திருப்பாற்கடலை மந்தரமலை கலக்கினாற்போலப் பரிசுத்தமாயிருந்த கைகேயியின் மனத்தை மந்தரையென்னுங் கூனி கவனிக்க, கைகேயியானவள் தான் மனங்கலங்கியதுபோலவே தசரதனையும் ராமவிரஹத்தை நினைந்து கலங்கச் செய்து, அப்போது ஸுமந்ரனைக்கொண்டு தசரதர் முன்னிலையில் இராமபிரானை வரவழைத்துக் காட்டுக்கனுப்ப, அப்பிரான் லக்ஷ்மணனோடு காட்டுக்குப் புறப்பட்டதும் ஓரடையாளமென்பதாம். இவ்வரலாற்றின் விரிவை “மாற்றுத்தாய் சென்று” என்ற பாட்டின் உரையிற் காண்க. இலக்குமணன்றன்னோடும் என்றது - ஸீதையாகிய உம்மோடு என்பதற்கும் உபலக்ஷணமாம். கைகேசி- *** யகரசகரப்போலி. மறாதொழிய = ஸத்யவாதியாதலால் மறுக்கமாட்டிற்றிலன்.

English Translation

Kaikeyi’s heart turned against Rama. She asked for boons that King Dasaratha could not refuse. “O Lion-of-the-race, go to the forest”, he said with a distributed heart. Rama and Lakshmana went into the forest. This here is another proof.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்