விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தழுவிநின்ற காதல் தன்னால்*  தாமரைக் கண்ணன் தன்னை,* 
    குழுவு மாடத் தென் குருகூர்*  மாறன் சடகோபன்,*  சொல் 
    வழுவு இலாத ஒண் தமிழ்கள்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    தழுவப் பாடி ஆட வல்லார்*  வைகுந்தம் ஏறுவரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தழுவி நின்ற - விட்டு நீங்காத
காதல் தன்னால் - (பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே
தாமரை கண்ணன் தன்னை - செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து
குழுவு மாடம் தென்குருகூர் - திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான
மாறன் சடகோபன் - ஆழ்வார்

விளக்க உரை

தழுவிநின்ற.) இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார். திருத்துழாய் பரிமளத்தோடு கூடவே அங்குரிக்குமாபோலே ஆழ்வார் “அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து” என்றபடியே பகவத் விஷயமானகாதலோடு கூடவே அவதரித்தவராதலால் “தழுவிநின்ற காதல் தன்னால்” என்றார். * ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந:இ ஸாத்விகஸ்ஸ து விஜ்ஙேய: ஸ வை மோக்ஷ்ர்ர்த்தசிந்தக.” என்கிறபடியே எம்பெருமான் தனது செந்தாமரைக் கண்களால் கருவிலே கடாக்ஷித்தருளியே இந்தக் காதலை உண்டுபண்ணினானென்பது தோன்றத் தாமரைக்கண்ணன்தன்னை என்கிறார். “மறக்குமென்று செந்தாமரைக்கண்ணெடும், மறப்பறவென்னுள்ளே மன்னினான்” என்றார் தீழும். குழுவுமாடத்தென்குருகூர் என்றவிடத்திற்கு ஈடு;-“*ஸர்வஞ்ச குசலம் க்ருஹே* என்னுமாபோலே ஆழ்வார்க்கு ஆர்த்தி மிகமிக ஸர்வேச்வரன்வரவு தப்பாது என்று திருநகரி குடிநெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.” என்பது.

English Translation

This decad of the perfea thousand Tamil songs, sung by Satakopan of tall-mansioned kurugur city, is addressed with embracing love to the lotus-eyed Krishna. Those who can sing and dance to it with love will ascend Heaven

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்