விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சக்கரத்து அண்ணலே என்று*  தாழ்ந்து கண்ணீர் ததும்ப,* 
    பக்கம் நோக்கி நின்று அலந்தேன்*  பாவியேன் காண்கின்றிலேன்,* 
    மிக்க ஞான மூர்த்தி ஆய*  வேத விளக்கினை*  என் 
    தக்க ஞானக் கண்களாலே*  கண்டு தழுவுவனே.          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சக்கரத்து அண்ணலே என்று - கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி
தாழ்ந்து - அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து
கண்நீர் ததும்ப- கண்ணீர்மல்க
பக்கம் நோக்கி நின்று - சுற்றும் பார்த்து நின்று
அலந்தேன் - தளர்ந்தவனான

விளக்க உரை

நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யக்தமே; அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ; அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸஜ்ஞானத்திற்கு விஷயமாகிக்கொண்டிருக்கிறானே! இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார். கையுந்திருவாழியுமான அழகைக்காட்டி என்னையீடுபடுத்திக் கொண்டவனே! என்று சொல்லித்தரைப்பட்டுக் கண்களில் நீர் பெருகப்பெற்றேன்; எந்தப் பக்கமாக வருகின்றானோ வென்று பக்கந்தோறும் நோக்கினேன்; மஹாபாபியாகையாலே காணப்பெற்றிலேன். காணாவிட்டால் மறந்து பிழைக்கலாமே; நெஞ்சில் பிரகாசியாமலிருந்தாலன்றோ மறக்கலாம்; பரிபூர்ணமான ஞானத்தையே வடிவாகவுடையனாய் வேதவேத்யனாயிருக்கிற அப்பெருமானை மறவாமலிருப்பதற்குறுப்பாக எனக்குத்தகுந்தாப்போலே ஒரு ஜ்ஞான த்ருஷ்டியுண்டாகி அத்தாலே கண்டுதழுவும்படியாயேயுள்ளது; மறக்கவும் வழியில்லைஇ தரிக்கவும் வழியில்லை என்றாராயிற்று.

English Translation

Tears welling, felling low, I roam and look around. Alas, I do not see my Lord of discus conch coming. With proper mind's eye I shall see and enjoy the great icon of pure knwoeldge, light of the Vedas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்