விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்*  ஐம்புலன் வெல்ல கில்லேன்,* 
    கடவன் ஆகி காலந்தோறும்*  பூப்பறித்து ஏத்த கில்லேன்,*
    மட வல் நெஞ்சம் காதல் கூர*  வல்வினையேன் அயர்ப்பாய்த்,* 
    தடவுகின்றேன் எங்குக் காண்பன்*  சக்கரத்து அண்ணலையே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்று இடகிலேன் - (இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்;
ஒன்று அட்டகில்லேன் - (தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்;
ஐம் புலன் - இந்திரியங்களைந்தையும்
வெல்லகில்லேன் -பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்;
கடவன் ஆகி - நியதியுடையவனாகி

விளக்க உரை

எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்? அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும் அந்வயமில்லாதிருக்கின்ற நான் கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது இடகிலேன் என்றது. “ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங்கைகாட்டி” என்கிறபடியே ஒருவர்க்கு ஒரு பிச்சையிட்டறியேன் என்றபடி. அட்டகில்லேன் என்றது தாஹித்து வந்தவர்களுக்குத் தண்ணீர் வார்த்தறியேன் என்றபடி. இங்ஙனே சில காரியங்கள் செய்திருந்தால் கர்மயோகத்திலே கணக்கடைக்கலாம்; அதற்கு வழியில்லையாயிற்று என்கை. ஐம்புலன் வெல்லகில்லேன்=செவிவாய் கண் முதலிய இந்திரியங்கள் பட்டிமேயாதபடி நோக்கினேனாகில் ஞானயோகத்திலே சிறிது அடியிட்டதாகக் கணக்கிடலாம்; அதற்கும் வழியில்லையாயிற்று. கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன்= திருவாராதனத்திற்கு யோக்யதையுள்ள காலங்களிலே புஷ்பங்கள் சேகரித்துமறியேன், ஸமர்ப்பித்துமறியேன். இவை செய்தால் பக்தியோகத்திலே சிறிது அந்வயமுள்ளதாகக் கணக்கிடலாம்; அது தனக்கும் வழியில்லையாயிற்று. கடவனாகி-ஒரு நியமத்தோடே கூடினவனாகி என்றபடி.

English Translation

I have no goodwill, no riches, no power over my senses, nor streadfast devotion to worship you with flowers; I have only sinful heart. O sinful me, I search, where can I see you, O Lord of discus and conch?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்