விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறிந்து அறிந்து தேறித் தேறி*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நிறைந்த ஞான மூர்த்தியாயை*  நின்மலமாக வைத்து,* 
    பிறந்தும் செத்தும் நின்று இடறும்*  பேதைமை தீர்ந்தொழிந்தேன்* 
    நறுந் துழாயின் கண்ணி அம்மா!*  நான் உன்னைக் கண்டுகொண்டே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நறுதுழாயின் கண்ணி அம்மா - பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே!
நான் உன்னை கண்டுகொண்டு - நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று
அறிந்து அறிந்து - உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து
தேறி தேறி - மிக்க தெளிவையுடையேனாகி
யான்- இப்படித் தெளிவுபெற்ற நான்

விளக்க உரை

ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே; நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய, ‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்; பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி, பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்லவிருக்கிறார். இப்பாட்டில், “நறுந்துழாயின் கண்ணியம்மா! நானுன்னைக்கண்டு கொண்டு பேதைமை தீர்ந்தொழிந்தேன்” என்றருளிச்செய்வதைப் பார்த்தால், * கோலமேனி காணவாராய்* என்று அபேக்ஷித்தபடியே எம்பெருமான் வந்து காட்சி தந்துவிட்டதாகத் தோன்றும். உண்மை அப்படியில்லை; அடுத்தபாட்டில் “கண்டுகொண்டு பாடியாட-வந்திடகில்லாயே” என்றிருக்கையாலே இன்னமும் காணப்பெற்றிலர்என்றே கொள்ளவேணும். ஆனால், இப்பாட்டில் நானுன்னைக் கண்டுகொண்டே என்கிறாரே; இதற்குப்பொருள் என்? என்னில்; மாநஸஸர க்ஷ்ர்த்காரமென்றும் பாஹ்யஸாக்ஷ்ர்த்காரமென்றும் காண்கை இரண்டு விதம்; *முனியே நான்முகனுக்கு உட்பட்டதெல்லாம் மாநஸஸாக்ஷ்த்காரமேயாகும். ஆகவே இப்பாட்டில் சொன்னது மாநஸஸாக்ஷ்ர்த்காரமென்றும், மேற்பாட்டில் விரும்புவது பாஹ்யஸாக்ஷ்ர்த்காரமென்றும் அறிக. ஆசார்யஹருதயத்தில் (முடிவில்) “கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதிகண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய்” என்றருளிச்செய்தது இங்கே அநுஸந்தேயம்.

English Translation

Lord of fragrant Tulasi garland! In the depth of my soul, I see you as an icon of pure knowledge Losing myself in thought and recovering time and again, through birth and death I have held you high, and over-come my despair

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்