விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நாக்கு நீள்வன் ஞானம் இல்லை*  நாள்தோறும் என்னுடைய,* 
    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்*  அல்ல புறத்தினுள்ளும்,* 
    நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!*  நின்னை அறிந்து அறிந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாள் தோறும் - ஸர்வகாலத்திலும்
என்னுடைய- என்னுடைய
ஆக்கை உள்ளும் - சரீரத்தினுள்ளும்
ஆவி உள்ளும் - ஆத்மாவினுள்ளும்
அல் புறத்தின் உள்ளும் - மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும்

விளக்க உரை

எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும் அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார். இறைப்பொழுதும் ஓயாதே எட்டி யெட்டிப் பார்க்கின்றேன்; எந்தத் திசை வழியாக வருவாயென்று தெரியாமையாலே நாற்புறமும் விழித்துப் பார்க்கிறேன்; எதற்காகவென்னில்; உன்னைக் காண்கைக்காகவத்தனை. காண்பதற்கு மேலே வேறொரு ப்ரயோஜனத்தைக் கனவிலும் கருதாத குடியிலே யன்றோ பிறந்திருப்பது. ‘இப்படி எனக்கு ஆசை’ என்று வாய்விட்டுச் சொல்லமாட்டாதே நாக்கை நீட்டியிருக்கின்றேன். நாக்கை நீட்டுவானேன் என்னில்; “கன்னலங்கட்டி தன்னை; கனியை யின்னதமுதந் தன்னை” என்றும் எனக்குத்தேனே பாலே கன்னலே யமுதே” என்றும் “விழுமியமுனிவர் விழுங்குங் கோதிலின் கனியை” என்றும் சொல்லுகிறபடியே பகவத்விஷயமென்பது பரம போகய் வஸ்துவாகையாலே “துர்வமுதைப் பருகிப்பருகி” “அடியேன் வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே” என்கிற கணக்கிலே நாவுக்கும் விஷயமுண்டே.

English Translation

You stand in all beings everyday and everywhere, in my body, in my soul and in all the things without exception, I ponder and ponder, seek and seek, and try to see you in my soul. Alas, I have only a loose tongue, but no faculty!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்