விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'ஈவு இலாத தீவினைகள்*  எத்தனை செய்தனன்கொல்?* 
    தாவி வையம் கொண்ட எந்தாய்!*  தாமோதரா! என்று என்று* 
    கூவிக் கூவி நெஞ்சு உருகி*  கண்பனி சோர நின்றால்,* 
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய்*  பாவியேன் காண வந்தே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈவு இலாத - முடிவில்லாதபடி
எத்தனை செய்தனன் கொல் - எவ்வளவு செய்தேனோ!
தாவி - திருவடிகளாலே வியாபித்து
வையம் - உலகங்களை
கொண்ட - ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட

விளக்க உரை

நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார். அவனோட்டைக் கலவியையே அல்லும் பகலும் ஆசைப்பட்டுக்கொண்டு கிடக்கிற ஆழ்வார் ‘பாவி ‘பாவி நீ யென்றொன்று சொல்லாய்’ என்கைக்குக் கருத்து யாதெனில்; ‘ஆழ்வீர்! நீர் பாவமே செய்து பாவியானவராகையாலே உம்மோடு கலப்பதற்கு எனக்கு விருப்பமில்லை! என்று சொல்லுகிற இந்த வார்த்தையாவது தமது முகத்தை நோக்கி அவன் சொல்லுவானாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும்இ கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் கவர்ந்து கொள்ளலாமென்றும் நினைத்துச் சொன்னதத்தனை. ஆண்டாளும் “மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே” என்றது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “அவச்ய மநு போக்வத்யம் க்ருதம் கர்ம சுபாசுபம்” என்றும் “ நாபுக்தம் க்ஷியதே கர்ம கல்பகோடிசதைரபி” என்றுமுள்ள பிரமாணங்களை நோக்கினால் தீவினைகள் அநுபவித்துத் தீர்க்கமுடியும் என்று ஏற்படுகிறது; அப்படியும் தீராத எத்தனை பாவங்களைப் பண்ணினேனோ! என்கிறார் முதலடியில். “மதியிலேன் வல்வினையே மாளாதோ” என்றதும் காண்க.

English Translation

My Lord! I call, pouring my heart in tears, "Lord-who-took-the-Earth-in-one-Leap!", "Damodarai", and many such names. Alas, how many dark indelible acts I must have done; you do not even say, "Sinner!", when I come to see you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்