விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொள்ள மாளா இன்ப வெள்ளம்*  கோது இல தந்திடும்,*  என் 
    வள்ளலேயோ! வையம் கொண்ட*  வாமனாவோ! என்று என்று,* 
    நள் இராவும் நன் பகலும்*  நான் இருந்து ஓலம் இட்டால்,* 
    கள்ள மாயா! உன்னை*  என் கண் காண வந்து ஈயாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொள்ள - அநுபவிக்கவநுபவிக்க
மாளா - எல்லைகாணவொண்ணாத
இன்பம் வெள்ளம் - ஆனந்தப்பெருக்கை
கோது இல - குறையற
தந்திடும் - உபகரிக்கின்ற

விளக்க உரை

ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி ‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார். * தீர்ப்பாரையாமினிக்குமுன்னே * வீற்றிருந்தேழுலகில் “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்” என்று சொல்லும்படியாக அப்போது எம்பெருமான் தந்த பரமாநந்த ஸந்தோஹத்தைத் திருவுள்ளம்பற்றிக் “கொள்ளமாளா வின்பவெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளலே!” என்கிறார். கொள்ளக்கொள்ள மாளாத இன்பவெள்ளமாவது மேன்மேலும் பெருகிச்செல்கின்ற இன்பவெள்ளம். அதனைக் கோதில்லாதபடி தருகையாவது என்னென்னில்; பகவத் விஷயத்தை அநுபவித்துக் கொண்டே வரும்போது ‘அநுபவித்தது போதும்’ என்று தோன்றினாலும், ‘இதைவிட்டு இன்னொரு விஷயத்தை அநுபவிப்போம் என்று ஆசை பிறந்தாலும் அது இன்பத்திற்குத் கோது; அத்தகைய கோது இல்லாதபடி தந்தனனென்றது “எப்பொழுதும் நான் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே’ என்னும்படியாகத் தந்தருளினனென்றபடி. என் வள்ளலே! என்று சொல்லி ஓ! என்கிறார், இப்படி இப்போது கூப்பிடப்பண்ண நினைத்திருந்தால் வீற்றிருந்தேழுலகிலே அப்படியென்னை அநுபவிப்பிக்கவேணுமோ? என்கைக்காக.

English Translation

I stand and call out night and day, "O benevolent Lord!", "Faultless-uncontainable-flood-of-joy!", "O Lord-who-measured-the-Earth!", and many such names. Alas, you do not come. Vicious Lord, grant that my eyes may see you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்