விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அல்லியம்பூ மலர்க்கோதாய்!*  அடிபணிந்தேன் விண்ணப்பம்* 
    சொல்லுகேன் கேட்டருளாய்*  துணைமலர்க் கண் மடமானே!*
    எல்லியம் போது இனிதிருத்தல்*  இருந்தது ஓர் இட வகையில்* 
    மல்லிகை மா மாலைகொண்டு*  அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அல்லி-அகவிதழ்களையுடைய
அம் பூ-அழகிய பூக்களால் தொடுக்கப்பட்ட
அடி பணிந்தேன்-(உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்-விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்-(உம்மிடத்தில்) சொல்லுவேன்;

விளக்க உரை

இதனால் அயோத்தியிலிருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் ராத்ரி வேளையில் ஏகாந்தமான இடத்தில் உல்லாஸமாக இருக்கையில், பிரணய ரோஷத்தினால் பிராட்டி பெருமாளை மல்லிகைமாலையைக் கொண்டு கட்டியதை அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்குமாதலால், இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகுமென்க. வநவாஸஞ்சென்றமை இன்னுங்கூறப்படாமையால், இச்செயல் நாட்டியிலிருந்தபோது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமேயன்றி, வநவாஸகாலத்து நிகழ்ந்ததாகக் கொள்ளுதல் பொருந்தாதென்க. முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலையுவமை- உடம்பின் இளைத்தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலு மென். ஸுகாநுபவத்துக்கு ஏகாந்தமானகாலமாதலால் எல்லியம்போது எனப்பட்டது. ஈற்றடியில், அங்கு- அசை.

English Translation

O Lady of full blossomed garland, Do with lotus-eyes! I fall at your feet and submit, pray hear me speak. Sweetly at dusk in a solitary place, you bound him with a string of Jasmine flowers. This here is another proof.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்