விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீலம் இல்லாச் சிறியனேலும்*  செய்வினையோ பெரிதால்,* 
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி*  'நாராயணா! என்று என்று,*
    காலந்தோறும் யான் இருந்து*  கைதலைபூசல் இட்டால்* 
    கோல மேனி காண வாராய்*  கூவியும் கொள்ளாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீலம் இல்லா - நன்மை யொன்று மில்லாத
சிறியன் ஏலும்- சிறியவனா யிருந்தேனாகிலும்
செய் வினையோ - செய்த பாபமோ
பெரிது- பெரிதாயிருக்கின்றது;
ஆல் - அந்தோ!;

விளக்க உரை

ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று அருளிச்செய்வதுண்டு; வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது. இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும். நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார். சீலமாவது நன்னடத்தை. அஃதில்லாமைபற்றித் தம்மை நீசராக அநுஸந்தித்துக் கொள்ளுகிறார். செய்வினையோ பெரிதால் என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு;- “பண்ணின பாபத்தைப் பார்த்தவாறே சிதசிதீச்வரதத்வத்ரயத்தையும் விளாக்குலைகொள்ளும் படி பெருத்திருந்தது. ஸம்ஸாரிகளுடைய குற்றங்களைப்பொறுக்கு மீச்வரனுடைய குணங்களிலும், அவன்தந்த பக்திரூபாபந்நஜ்ஞானத்திலுங்காட்டில் பெரிதாயாயிற்றிருக்கிறது.” நல்ல காரியங்களைச் செய்யாமற்போனாலும் செய்ய வேணுமென்று நெஞ்சினால் நினைத்தாலும் பலனுண்டு; தீய காரியங்கள் விஷயத்தில் அப்படியல்ல; தீயன செய்யவேணுமென்று நெஞ்சினால் நினைத்திருந்து அப்படியே செய்யாதொழிந்தால் குற்றமில்லை என்று நூற்கொள்கையுண்டு. நான் அப்படியல்லாமல் தீயன செய்து தலைக்கட்டினே னென்கிறார் செய்வினையோ என்பதனால்.

English Translation

I stand with hands joined over my head and call incessantly, "O Lord-who swallowed-the-Universe!", "Icon-of-knowledge!", "Narayana!", and many other names; you do not show yourself not call me unto you. Alas, I am a wrteched low-born, great indeed are my misdeeds

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்