விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு*  ஆட்செய்து நோய் தீர்ந்த* 
    வழுவாத தொல்புகழ்  வண் குருகூர்ச் சடகோபன்,*  சொல்
    வழுவாத ஆயிரத்துள்*  இவை பத்து வெறிகளும்,* 
    தொழுது ஆடிப் பாடவல்லார்*  துக்க சீலம் இலர்களே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொழுது ஆடி - வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து
துர் மணி வண்ணனுக்கு - அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
ஆள் செய்து - அடிமைத்தொழில் செய்து
நோய் தீர்ந்த - நோய் தீரப்பெற்றவரும்,
வழுவாத - அவத்யமடையாத

விளக்க உரை

இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். “ஆட் செய்து நோய்தீர்ந்த” என்று வாசகமிருந்தாலும் ‘உருபுபிரித்துக் கூட்டுதல்’ என்கிற முறைமையின்கீழ் “நோய்தீர்ந்து ஆட்செய்த” என்று பொருள்கொள்ளத்தகும். “நோய்தீர்ந்து தொழுதாடிப்பாடித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்த வண்குருகூர்ச்சடகோபன்” என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். இனி, ஆட்செய்து என்பதை சொல்திரியினும் பொருள் திரியாவினைக்குறை” என்ற நன்நூற் சூத்திரத்தின்படி எச்சத்திரிபாகக் கொண்டு ‘ஆட்செய்ய’ என்று பொருள் கொள்ளவுமாம். தோழியின் சொற்படியே தாய்மார்கள் தொழுதாடித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்ய, அதனால் ஆழ்வார் நோய் தீர்ந்ததாகக் கூறியவாறு. ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று; ஆத்மா உள்ளவரையில் அநுவர்த்திக்கு மத்தனை. ஆகையாலே நோய்தீர்ந்த என்று சொல்லுவதற்கு ப்ரஸக்தியில்லை; அப்படியிருக்க இங்கு ‘நோய்தீர்ந்த’ என்றது மோஹம் தெளிந்து சிறிது உணர்த்தியுண்டானமைபற்றியென்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“தொழுதாடித் தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த” என்றதுக்கு அம்மங்கியம்மாள் பணிக்கும்படி-மோஹித்தவன் அல்பம் ஆச்வஸித்தவாறே மோர்க்குழம்பு குடித்தாள் தரித்தாள் கண்விழித்தாள் வார்த்தை சொன்னாள் என்பர்களிறே; அதுபோலே காணும் என்று.”

English Translation

This decad of the faultless thousand,-on hysteria,- was sung by the world-famous kurugur city's Satakpan, freed of sickness, worshipping and dancing, n seeing the Gem-Lord. Those who can dance and sing these songs will overcome depression of spirits

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்