விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அணங்குக்கு அரு மருந்து என்று*  அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்* 
    துணங்கை எறிந்து*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
    உணங்கல் கெடக்*  கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? 
    வணங்கீர்கள் மாயப் பிரான்*  தமர் வேதம் வல்லாரையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணங்குக்கு - இப்பெண்பிள்ளைக்கு
அரு மருந்து என்று - அருமையான மருந்தென்று சொல்லி
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் - தேவதாந்தரத்திற்கு ஆடறுக்கவும் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து
சுணங்கை எறிந்து - ஒருவகைக் கூத்தாடுதலையும் செய்வித்துக் கொண்டு
நும் தோள் குலைக்க படும் அன்னைமீர் - தோள்கள் துடிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தாய்மார்களே!

விளக்க உரை

இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம். இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள். ஆடு அறுக்கவும மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள். பராய் என்றது பராவியென்றபடி. பராவுதலாவது பாரித்தல். ஒன்பதினாயிரப்படி, இருபத்தினாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி, பன்னீராயிரப்படி ஆகிய நான்கு வியாக்கியானங்களிலும் இவ்விடத்தில் ஏகரூபமாகவே ஒரு அச்சுப்பிழை புகுந்துள்ளது; அதாவது, “பராவி-பாரித்து” என்றிருக்கவேண்டுவது ‘ப்ரார்த்தித்து’ என்றே விழுந்திட்டது. இங்கு அதுவன்று பொருள்;திருத்திக்கொள்க. இரண்டாமடியில் “சுணங்கை-எறிந்து” என்றும் “சுணம்-கையெறிந்து”என்றும் கொண்டு பொருள் கூறுவர். சுணங்கையென்பது சுணங்கைக்கூத்தைச் சொன்னபடி: அதாவது கையைத்தட்டி ஆடவதொருகூத்து; தேவதாந்தரஸமாராதனமாகச்செய்யும் செய்கை களிலே இந்தக் கூத்தாட்டமும் ஒன்றாகக்;கொள்ளத்தக்கது. “துணங்கை யென்று பாடமாய் துணங்கையென்ற கூத்தாகவுமாம்” என்பர் பன்னீராயிரவுரைகாரர். சுணம், கையெறிந்து

English Translation

To cure her spirits. You sacrifice a goat and pour toddy, strike your hands and shake your shoulders, what use, Ladies?, -like watching the donkey's lips twitch while the grains disappear! Listen, go seek the Vedic seers and devotees of the Lord, now

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்