விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெறிந்த கருங்குழல் மடவாய்!*  நின் அடியேன் விண்ணப்பம்*
    செறிந்த மணி முடிச் சனகன்*  சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-
    அறிந்து அரசு களைகட்ட*  அருந்தவத்தோன் இடை விலங்கச்* 
    செறிந்த சிலைகொடு தவத்தைச்*  சிதைத்ததும் ஓர் அடையாளம்*  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெறிந்த கருங்குழல் - நெறிப்புக்கொண்ட கரிய கூந்தலையுடையவளும்
மடவாய் - மடப்பத்தையுடையவளுமான பிராட்டீ!
நின் அடியேன் - உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம் - விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த - நெருங்கின

விளக்க உரை

இராமபிரான் பிராட்டியை மணம்புரிந்து கொண்டபடியையும், வழியிடையிற் பரசுராமனை வென்ற வகையையும் இதனால் அடையாளமாகக் கூறுகின்றனன் அநுமான். செம்பட்ட மயிராயிராமல் கறுத்துச் சுருண்டிருக்கும் மயிலையுடைமையே கூந்தலுக்குச் சிறப்பாதலால் “தெறிந்த கருங்குழல்” என்றது; இது, முன்னிருந்தபடியையிட்டுச் சொல்லியவாறு. மடப்பமாவது- மனத்திற்கொண்டது விடாமை; சிறையிருக்கும்போதும் பிராட்டி பெருமாளை யல்லாது மற்றொருவனை செஞ்சிற்கொண்டவளன்றே. பரசுராமனிடத்திலிருந்து வாங்கியதாயிலும் வைஷ்ணவ தநுஸ்ஸாகையாலே “செறிந்தசிலை” என்கிறது. பிராட்டியின் திருவுள்ளத்தில் சங்கை நீங்குமளவும் பல அடையாளங்கள் சொல்லும்படி நினைத்திருப்பதனால் “ஓரடையாளம்” வில்லங்க- விலக்க எனப் பிறவினைப்பொருளில் வந்த தன்வினை; ..... என்பது வடநூலார். (அரசுகளைகட்ட இத்யாதி) பண்டொருகாலத்தில் கார்த்தவீர்யார்ஜுனன் ஸேனையுடனே காட்டிற்சென்று வேட்டையாடிப் பரசுராமனது தந்தையான ஜமதந்நி முனிவரது ஆச்ரமத்தையடைந்து அவரது மதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில், அவரிடமிருந்த ஹோமதேது அவர்க்கு எளிதிற் பல வளங்களையுஞ் கரந்ததுகண்டு அப்பசுவின் கன்றை அவரது மதியின்றி வாலியக்கவர்ந்து செல்ல, அதனையறிந்த பரசுராமன் சீறிச்சென்று அக்கார்த்தவீர்யனுடன் போர்செய்து அவனைப் பதினோரு அக்ஷௌஹிணி ஸேனையுடனே நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தனது கோடாலிப்படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டு, தன் தந்தையைக் கறுவிக்கொன்ற அவன் குமாரர்களையும் கொன்று, அதனாலேயே க்ஷத்ரியவம்ச முழுவதன்மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்ட வரலாறு அறிக.

English Translation

O Lady of dark dense hair! Your humble servant submits; My Lord won you by breaking the tall-crowned Janaka’s bow. The ascetic Parasurama bent on weeding out kings heard of this and confronted him with his bow. My Lord took his bow, and took the fruit of his penance as well. This here is one proof of my identity.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்