விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,* 
    வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,* 
    காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,* 
    வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் - அழகியதான
வேங்கடம் மலை - திருவேங்கடம்மலையிலேயுள்ள
அண்ணலை - ஸ்வாமி விஷயமாக
வாரி மாறாத - ஜலஸம்ருத்தி குறையாத
பை பூ பொழில் சூழ் - பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
குருகூர் நகர் - திருநகரியில் (அவதரித்த)

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். மழை ஒருநாளும் மாறாதபடியாலே குளிர்ந்து அழகியதான திருவேங்கடமலையிலே, தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காக வந்து நிற்கிற சீலம்பொருந்திய எம்பெருமான் விஷயமாகப் பணித்ததாம் இப்பதிகம்; ஒரு பாசுரத்திலும். திருவேங்கடமுடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லையாயிருக்க இங்ஙனே சொல்லுவானேன்? என்னில்; தர்மியின் ஐக்கியத்தைக் காட்டினபடி. திருவாய்மொழிக்கு அர்ச்சாவதாரத்திலேயே முழுநோக்கு என்று காட்டினபடியுமாம். இப்பதிகத்தில் “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை” என்று பெரிய பிராட்டியார்க்கு முன்பே நித்யஸம் ஸாரிகளுக்கு முகங்கொடுக்கும் சீலத்தைச் சொல்லிற்றாகையாலே சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானைக் கவிபாடினபாயாயிற்றென்ப. “வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” என்கையாலே பிராட்டிக்கும் எம்பெருமானுக்குப் போலவே பலனளிக்குந்திறன் உண்டென்று சிலர்சொல்லுவார்கள். நம்மை எம்பெருமான் அங்கீகரிப்பதற்கு இடையூறாக இருக்கும் தீவினைகளைப் புருஷகாரக்ருத்யத்தாலே பிராட்டி போக்குவாள் என்றதித்தனை. சதுச் ச்லோகீ பாஷ்யத்திலே ஸ்ரீமந்நிக மாந்ததேசிகன் “…

English Translation

This decad of the thousand sweet songs, by Karimaran Satakopan of cool-groved Kurugur city, is addressed to the Lord of incessantly raining Venkatam. Those who master it will end all despair, by the grace of the lady-of-the-unfading-lotus

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்