விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானத்தும் வானத்துள் உம்பரும்*  மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் 
    தானத்தும்,*  எண் திசையும் தவிராது*  நின்றான் தன்னை,*  
    கூனல் சங்கத் தடக்கையவனை*  குடம் ஆடியை 
    வானக் கோனை,*  கவி சொல்ல வல்லேற்கு*  இனி மாறுஉண்டே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உள்வானத்து உம்பரும் - அதுக்குள்ளாகப் பெரியதாயிருக்கிற மஹர்லோகாதிகளிலும்
மண்ணுள்ளும் - பூமிக்குள்ளும்
மண்ணின் கீழ் தானத்தும்- பூமியின் கீழ் இருக்கிற பாதாள உலகத்திலும்
எண் திசையும் - இவற்றிலுண்டான எட்டுவிதமான பதார்த்தங்களிலும்
தவிராது - ஒன்றிலும் வழுவாதபடி

விளக்க உரை

இப்பாட்டு ஆழ்வாருடைய ஸர்வவிலாக்ஷ்ணமான பெருமையைக் காட்டுகின்றது. பரமபதத்திலுள்ள நித்யர்களென்ன. முக்தர்களென்ன, இவ்விபூதியிலுள்ள பராசர பாராசர்ய வால்மீகி ப்ரப்ருதிகளான மஹரிகளென்ன, ஆகிய இவர்களெல்லாரிற் காட்டிலும் ஆழ்வார்க்குண்டான வைலக்ஷ்ண்யம் இப்பாசுரத்தில் வெளியாகின்றது. எம்பெருமானுடைய பரவ்யூஹவிபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற எல்லா நிலைமைகளிலும் புக்குக் கவிசொல்லவல்ல வெனக்கு எதிருண்டோ வென்கிறார். நித்யமுக்தர்கள் பரத்வமல்லது வேறொன்றையும் அறியார்கள். மஹர்ஷிகளில் வந்தால், பராசுர பகவானும் வேதவ்யாஸபகவானும் க்ருணாவதாரமல்லது மற்றொன்று அறியார்கள். வால்மீகி பகவான் ஸ்ரீராமாவதாரமன்றி யறியான். ஸநக ஸநந்தநாதிகள் அந்தர்யாமித்வத்திலே அதிகமாக ஊன்றியிருப்பார்கள். இங்ஙனே பார்க்குமிடத்து ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பாழியாயிருக்கும். நம்மாழ்வாருடைய தன்மை இங்ஙனனேயன்று; வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றானைக் கவிபாடுபவாராயிற்றிவர். இங்கு விசேஷணாம்ஸங்களில் முழுநோக்கு. விசேய பூதனான எம்பெருமான விஷயத்தில் கவிபாடுதல் மற்றவர்கட்கும் உள்ளதேயானாலும், விசேஷணாம்ஸங்களிலே தனித்தனியே புகுந்து அவ்வோ நிலைமைகளுக்கும் கவிபாடுதல் ஆழ்வா ரொருவர்க்கேயா மித்தனை.

English Translation

In Heaven and in the worlds above, on Earth and in the worlds below, he stands without fail. His strong hand folds over a coiled conch. He is the Lord of the celestials, he danced with pots. I have sung his praise. Now can there ever be one equal to me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்