விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்றும் ஒன்று ஆகி*  ஒத்தாரும் மிக்கார்களும்,*  தன் தனக்கு -
    இன்றி நின்றானை*  எல்லா உலகும் உடையான் தன்னை,* 
    குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை*  சொல் மாலைகள்,* 
    நன்று சூட்டும் விதி எய்தினம்*  என்ன குறை நமக்கே?          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்றும் - பரத்வம் முதலான ஸர்வாவஸ்தைகளிலும்
ஒன்று ஆகி - ஒரேப்ரகாரமுடையனாய்க் கொண்டு
ஒத்தாரும் மிக்கார்களும் - ஸமராயும் அதிகராயும் இருப்பார்
தன்தனக்கு - தனக்கு
இன்றி நின்றானை - இல்லாமலிருப்பவனாய்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டு மினியென்றுமே” என்று செருக்குத் தோற்றப் பேசினார். இத்தகைய செருக்கு எத்தாலே வந்ததென்ன, எம்பெருமானருளாலே வந்த தென்கிறாரிப் பாட்டில். பரமபத நிலையனாய் நிற்கும் நிலைமையோடு, மநுயாதி ஸஜாதீயனாய் அவதரிக்குமவதாரங்களோடு வாசியற எல்லா நிலைமைகளிலும் தன்னோடு ஒத்தவர்களும் மேம்பட்டவர்களுமின்றிக்கே யிருப்பவனாய், ஸகல லோகங்களையும் தனக்கு சேஷமாகவுடையனாய், அந்த சேஷவஸ்துக்களுக்கு இந்திரனால் நேர்ந்த ஆபத்தை, கண்டதொரு மலையாலே போக்கினவனான ஸர்வேச்வரனைத் திருவாய்மொழியாகிற சொல்மாலைகளாலே அழகாக அலங்கரிக்கும் படியானபாக்கியம் பெற்றோம்: ஆனபின்பு நமக்கு ஒரு குறையுண்டோ வென்கிறார்.

English Translation

Upto himself without a peer or a superior, he bears all the worlds; he stopped the rains with a mountain. I have the fortune of singing his praise with a garland of sings which he fondly wears on his crown, what more do I want?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்