விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நந்தன் மதலையைக்*  காகுத்த னைநவின்று* 
    உந்தி பறந்த*  ஒளியிழை யார்கள்சொல்* 
    செந்தமிழ்த் தென்புதுவை*  விட்டு சித்தன்சொல்* 
    ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு*  அல்லல் இல்லையே.* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நந்தன மதலையை - நந்தகோபான் குமாரனான கண்ணபிரானையும்;
காகுத்தனை - இராமபிரானையும்;
நவின்று - (ஒருவர்க்கொருவர்  எதிரியாய்நின்று) சொல்லி;
உந்தி பறந்து - உந்தி பறக்கையாகிற லீலாரஸங்கொண்டாடின;
ஒளி இழையார்கள் - அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப்பெண்களிருவருடைய;

விளக்க உரை

இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பல்சொல்லித் தலைக்கட்டியவாறு. அடிவரவு:- என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தார்மாய காரார் நந்தன் நெறிந்த.

English Translation

This decad of pure Tamil songs by Vishnuchitta of Srivilliputtur recalls the Undi Parattal, sing-and swing-the-hips dance of beautiful girls extolling Krishna and Rama alternately. Those who master it shall be free from grief.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்