விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்*  உறை மார்பினன்,* 
    செய்ய கோலத் தடங் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 
    மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேன்,* 
    வெய்ய நோய்கள் முழுதும்*  வியன் ஞாலத்து வீயவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மைய கண்ணான் - மை யெழுதப்பட்ட கண்ணை யுடையனாய்
மலர்மேல் உறைவாள் - தாமரைமலரிலே வஸிப்வபளான லக்ஷ்மி
உறை - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
மார்பினன் - மார்பையுடையனாய்
செய்ய கோலம் தட கண்ணன் - சிவந்து அழகையுடைத்தாய் விசாலமான திருக் கண்களையுடையனாய்

விளக்க உரை

கீழ்ப்பாசுரத்திற் சொன்ன மேன்மைக்கு அடியான பிராட்டி ஸம்பந்தத்தையுடையவனை ஸகலபாதங்களும் தீரும்படி புகழப்பெற்றனென்கிறார். மையகண்ணாள்-கறுத்த கண்ணையுழடையவள் என்றபடி. ஸ்த்ரீகளுக்கு இது லக்ஷணம். வடநூலார் அஸிதேக்ஷணா என்று பிரயோகிப்பர்கள். பிராட்டி எம்பெருமானுடைய கரிய திருமேனியை இடைவிடாது கண்டுகொண்டிருப்பதனால் கருமை மிக்க கண்ணையுடையளாயினன்போலும் என்று ரஸோக்தியாகவும் நம் முதலிகள் அருளிச்செய்வர்கள். “பெரிய பிராட்டியர் திருக்கண்களாலே ஒருகால் கடாகூஷித்தால் ஒருபாட்டம் மழை பொழிந்தாப்போலே ஸர்வேச்ரன் திருமேனி குளிரும்படியாயிற்றிருப்பது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் நோக்குக. மலர்மேலுறைவாளுறை மார்பினன்=பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வாழப்பெற்ற திருமார்பை யுடையவன். ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலாபுரியை நினையாதாப்போலே ஸ்ரீமஹாலெக்ஷ்மியும் இவன் மார்பில் சுவடு அறிந்தபின்பு தாமரைப் பூவும் நினைக்கமாட்டாளாம். செய்யகோலத் தடங்கண்ணன்=பிராட்டியானவள் எம்பெருமானுடைய கரியகோலந் திருவுருவைக் கண்டுகொண்டேயிருந்த கருங் கண்ணியானதுபோலே, எம்பெருமானும் அப்பிராட்டியினுடைய செய்ய திருமேனியையே கடாகூஷித்துக்கொண்டிருக்கையாலே அத்திருமேனியிற் சிவப்பு ஊறி இவன் செய்யகோலத்தடங்கண்ணனாயிருக்கும். இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டிலெறிந்த நிலாவாகாமே அநுபவிக்கைக்கு ஒரு நாடாகவுண்டு என்கிறது விண்ணோர்பெருமான் தன்னை என்று.

English Translation

He bears on his chest the dark-eyes lotus-dame Lakshmi. He is the Lord of the celestials, he has beautiful large red eyes. I have the fortune of singing his praise with soft articulated words, thereby destroying the strange world's deathly miseries

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்