விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வீற்றிருந்து ஏழ் உலகும்*  தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,* 
    ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை*  வெம் மா பிளந்தான் தன்னை,* 
    போற்றி என்றே கைகள் ஆரத்*  தொழுது சொல் மாலைகள்,* 
    ஏற்ற நோற்றேற்கு*  இனி என்ன குறை எழுமையுமே?   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வீற்றிருந்து - (பரமபதத்திலே) எழுந்தருளியிருந்து
ஏழ் உலகும் - எவ்வுலகங்களிலும்
தனி கோல் செல்ல வீவு இல் சீர் - அத்விதீயமான செங்கோல் நடக்கும்படி
ஆற்றல் மிக்கு ஆளும் - சாந்தியுடனே ஆள்கின்ற
அம்மானை - ஸ்வாமியாய்

விளக்க உரை

எல்லாவுலகங்களையும் நிர்வஹிக்க வல்லவனான எம்பெருமாளை ஏத்தப்பெற்ற வெனக்கு ஒரு காலத்திலும் ஒரு குறையுமில்லை யென்கிறார். திருநாட்டில் திருவனந்தாழ்வான் மீது பெரியபிராட்டியாரோடுகூட எழுந்தருளியிருந்து “பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” என்கிறபடியே உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி நியமிப்பவனாய், இங்ஙனம் நியமிப்பதற்குறுப்பான ஞானம் சக்திமுதலிய திருக்குணங்கள் நிரம்பப்பெற்றவனாய் தன்னுடைய ப்ரபுத்வத்தினால் கொடுங்கோன்மை காட்டாதே சாந்தியோடே யிருந்து ஆள்பவனாய், ஸ்ரீக்ருஷ்ணாய்த் திருவததரித்துக் கேசிவதம் பண்ணினவெனக்கு எற்றைக்கு மேழேம்பிறவிக்கும் ஒரு குறையில்லை யென்றாராயிற்று. திருநாட்டில் அநுபவத்தையும் இங்கிருந்தே யநுபவிக்கப் பெற்ற நான் ‘அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறையுடை யேனல்லேன் என்றவாறு.

English Translation

My Lord who tore the horse kesin's jaws sits in command over the seven worlds in eternal good, and rules patiently. He wears on his crown the garland of poems that I have sung in joy, praising him with folded hands. Now what do I lack for seven lives?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்