விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரு உடை மன்னரைக் காணில்,*  திருமாலைக் கண்டேனே என்னும்,* 
    உரு உடை வண்ணங்கள் காணில்*  'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*
    கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்*  'கடல்வண்ணன் கோயிலே' என்னும்* 
    வெருவிலும் வீழ்விலும் ஓவாள்*  கண்ணன் கழல்கள் விரும்புமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரு உடை - பூர்ணமான செல்வத்தையுடைய
மன்னரை காணில் - அரசர்களைக் கண்டால்
திருமாலை - திருமகள் கொழுநனான எம்பெருமானை
கண்டேனே என்னும் - கண்டேனே! என்று கூறுவாள்;
உரு உடை - விலக்ஷண வடிவங்களையுடைய

விளக்க உரை

செல்வம் மிக்க அரசர்களைக் கண்டால் திருமாலைக்கண்டதாகவே சொல்லுவளாம். ஏனென்னில்; *** விஷ்ணு: ப்ருதிவீபதி:” என்று சாஸ்த்ரம் கூறுகின்றது; விஷ்ணுவின் அம்ஸமில்லாமல் அரசனாக அமைய முடியாததென்பது இந்த ப்ரமாணத்தின் கருத்து. பூதத்தாழ்வார் தமது திருவந்தாதியில் -“கோவாகி மாநிலங்காத்து நங்கண் முகப்பே, மாவேகிச் செல்கின்ற மன்னவரும்-பூமேவுஞ் செங்கமல நாவியான் சேவடிக்கே யேழ்பிறப்பும், தண்கமல மேய்ந்தார்தமர்.” என்றருளிச்செய்கிறார். பலகாலம் பகவானை ஆராதித்து அதன்பலனாகவே அரசர்களாகிச் சீரிய சிங்காசனம் ஏறுகின்றார்களென்கை. இங்கே சில ஐதிஹ்யங்கள் ஈட்டில் அருளிச் செய்யப்படுகின்றன. அரசன் ஸாமந்தன் தலையிலே அடியிட்டு ஆனைக்கழுத்திலே ஏறும்போது நாதமுனிவன் கண்டு “ஸர்வேச்வரன் ப்ரஹ்மாதிகள் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியின் மீது ஏறும்படி இதுவன்றோ” என்று சொல்லி மோஹித்தாராம். ஒரு ராஜாவைக்கண்டு அவன்பின்னே தொடாந்து போனார் என்று முண்டு. உருவுடை வண்ணங்கள் காணில் உலகந்தானென்று துள்ளும் = விலக்ஷணரூபங்களையுடைய பதார்த்தங்களைக்கண்டால் (அதாவது, நீலம் குவளை காயா முதலிய உருவழகிய பொருள்களைக் கண்டால் ‘உலகளந்த என்னாயன்’ என்று சொல்லித் துள்ளுகின்றாள்.

English Translation

Seeing wealthy nobles, she says, "I have been my Tirumal!" Seeing a shapely rainbow she dances saying, "Vamana measured the Earth!" All temples with icons are her ocean-hued Krishna's temples. Through fear and fatigue she seeks his feet, without a break

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்