விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏறிய பித்தினோடு*  எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,* 
    நீறு செவ்வே இடக் காணில்*  நெடுமால் அடியார்' என்று ஓடும்,*
    நாறு துழாய் மலர் காணில்*  நாரணன் கண்ணி ஈது என்னும்,* 
    தேறியும் தேறாதும் மாயோன்*  திறத்தனளே இத் திருவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏறிய பித்தினொடு - மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு - ஸகலலோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும் - க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில் -  பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும் - ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;

விளக்க உரை

“என்பெண்கொடி யேறியபித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக்கட்டிற்று. உலகில் பித்துக்கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே; அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன; பித்துஎறின நிலைமையிலு;ம பகவத்விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை யென்கிறாள். பராசரமஹர்ஷி முதலானார் தெளிந்திருந்து என்னவார்த்தை சொல்லுவார்களோ அந்தவார்த்தை இவள் சொல்லுகின்றாள் காண்மின். *** பராசரம் முநிவரம் க்ருதபெளர்வாஹ்நிகக்ரியம்இ மைததேய்: பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய ச” என்கிறபடியே வணங்கி வழிபட்டுக் கேள்விகேட்ட மைத்ரேய பகவானுக்கு, நற்றெளிவு கொண்டிருந்த பராசரபகவான் *** விஷ்ணோஸ் ஸகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திகம். ஸ்திதி ஸம்யமகர்த்தாஸென ஜகதோஸ்ய ஜகச்ச ஸ:.” என்று உபதேசித்த அரும்பெரும் பொருளை இவள் பித்துக்கொண்டிருக்கிற நிலையிலே அவவீலையாக எடுத்துரைக்கின்றாளாயிற்று. நன்குவேதமோதிய அந்தணன் பித்தேறினாலும் வேதவாக்கியங்களையே சொல்லித் திரியுமாபோலே இவளும் வாஸநாபலத்தாலே பகவத் விஷயமல்லது பேசாளென்கை. நீறு செவ்வேயிடக்காணில் நெடுமாலடியாரென்றோடும் = திருமாலடியார்களுக்கு பஸ்மதாரணம் சாஸ்த்ர நிஷித்தம் என்னுமிடம் ஆழவாரறியாததன்று; அப்படியிருக்க இங்கு அருளிச்செய்வதற்குக் கருத்தென்னென்னில்; “தாவ்யம் ஏதேனுமாகிலும் ஊர்த்த்வமாக இடக்காணில் நெடுமாலடியாரென்றோடும்.” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல். இதனை அடியொற்றியே மற்ற வியாக்கியானங்களு முள்ளன. பஸ்மதாரணம் பண்ணினவர்களேயாயினும் அந்த பஸ்மத்தைக் குறுக்கே பூசாதே நெடுக இட்டால் ‘ஊர்த்த்வபுண்ட்ரதாரிகளிவர்கள்’ என்று அவ்வளவுக்காக ப்ரதிபத்தி பண்ணுமென்றபடி.

English Translation

Her madness rises, and she says, 'All this is Krishna's cration!" Seeing men wearing white mud on their forehead she runs to them saying. "The Lord's devotees!" Seeing fragrant Tulasi flowers, she says, "This is Narayana's garland!" This precious girl is obsessed with the Lord, in her madness and out of it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்