விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காரார் கடலை அடைத்திட்டு*  இலங்கை புக்கு* 
    ஓராதான் பொன்முடி*  ஒன்பதோடு ஒன்றையும்* 
    நேரா அவன்தம்பிக்கே*  நீள் அரசு ஈந்த* 
    ஆராவமுதனைப் பாடிப் பற* 
    அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் ஆர் கடலை - கருமைபொருந்திய கடலை;
அடைத்திட்டு - (மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேதுகட்டி);
இலங்கை - லங்கையிலிருந்து;
புக்கு - (அவ்விடத்தில்);
ஒராதான் - (தன்வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய;

விளக்க உரை

லங்கைக்குச் சென்று ராவணனை முடிப்பதாகத் திருவுள்ளம்பற்றி வாநரஸேனையுடனே கடற்கரையை அடைந்த இராமபிரான், கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டுமென்று கடலரசனாகிய வருணனை வேண்டி; தர்ப்ப சயநத்தில் படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மேன்மையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அதுகண்டு சீற்றங்கொண்டு, அனைவரும் நடந்து செல்லும்படி கடலை வற்றச் செய்வேனென்று ஆந்நேயாஸ்திரத்தைத் தொடுக்கத் தொடங்க, அவ்வளவிலே வருணன் அஞ்சி நடுஙகி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து, கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுவதற்கு உடன்பட்டு ஒடுங்கி நிற்கப் பின்பு அதில் மலைகளினால் அணைகட்டி இலங்கையினுட் புக்கு அமர்க்களத்தில் ராவணனைத் தலையழித்து, ஸ்ரீவிபீஷணாழ்வாழ்வானுக்கு முடிசூட்டி அருளின வரலாறு அறிக. நேரா- ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்- சேர்ந்து (அறுத்து) என்றவாறு நிளரசு- “என்னிலங்கு நாமத்தளவு மரசென்ற” என்றதை நினைக்க.

English Translation

He made a bridge over the deep ocean, and entered Lanka. He felled the unrelenting Ravana’s ten crowned heads one by one, and then gave the kingdom to his younger brother Vibhishana. Sing of the insatiable nectar and swing. Sing of Ayodhya’s king and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்