விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒன்றிய திங்களைக் காட்டி*  'ஒளிமணி வண்ணனே' என்னும்* 
    நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,* 
    நன்று பெய்யும் மழை காணில்*  நாரணன் வந்தான் என்று ஆலும்,* 
    என்று இன மையல்கள் செய்தான்*  என்னுடைக் கோமளத்தையே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்றிய - (எல்லாத்தலைகளும்) பொருந்திய
திங்களை காட்டி - பூர்ண சந்திரனை (அருகில் நினறார்க்குக்) காட்டி
ஒளி மணிவண்ணனே என்னும் - ஒளியையுடைத்தான நீலமணிபோன்ற வடிவையுடையவனே! என்று கூப்பிடுகிறாள்;
நின்ற குன்றத்தினை நோக்கி - (அந்தச் சந்திரமண்டலத்தளவு உயர்ந்து) நிற்கிற மலையைப்பார்த்து

விளக்க உரை

எல்லாக் கலைகளும் நிரம்பப்பெற்ற சந்திரனைச் சுட்டிக்காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கின்றாள். உயரநின்ற வொரு மலையைப்பார்த்து, உலகங்களை அளந்தருள்வதற்காக நிமிரவளர்ந்து நிற்கிற ஸர்வேச்வர னென்றுகொண்டு ‘என் ஆர்த்தி தீரவாராய்’ என்றழைக்கின்றாள். நன்றாகப் பெய்யும் மேகத்தைக்கண்டால் ‘நாராயணன் நம் உறாவுதல் தீர வந்தான்’ என்று, மேகத்தைக்கண்டு மயில் கூத்தாடுமாபோலே கூத்தாடுபண்ணிவிட்டாரே! என் செய்வேன்! என்கிறாள் திருத்தாய். ஒன்றிய என்றது ஸகலகலைகளும் பொருந்தப்பெற்ற என்றபடி. …..:-சந்த்ரமா மநஸோ ஜாத:” என்று புருஷஸூக்தத்தில் சந்திரன் எம்பெருமானுடைய திருவுள்ளத்தில் நின்று தோன்றினனாகச் சொல்லிற்று. “காரணவஸ்துவின் குணங்கள் கார்யவஸ்துவிலே ஸங்கரமிக்கும்” என்கிற நியாயப்படி காரண பூதனான எம்பெருமானுடைய குளிர்ச்சிபடியாகவே சந்திரனுக்குக் குளிர்ச்சி யுண்டாயிற்றென்று பக்தர்கள் அபிஸந்தி கொள்வதுண்டு; குளிர்ந்த சந்திரனைக் கண்டவாறே குளிர்ந்த திருவுள்ளமுடைய எம்பெருமானாகவே பாவகை செல்லுகின்றது. ஒளிமணிவண்ணனே! என்று விளியாகவுங்கொள்ளலாம்; ஏகாரத்தை விளியுருபாகச் கொள்ளாமல் பிரிநிலைப் பொருளதாக்கி ‘இவன் ஒளிமணிவண்ணனேயன்றி வேறல்லன்’ என்பதாகவுங் கொள்ளலாம்.

English Translation

She points to the radiant Moon and says, "Gem-hued Lord!, She looks at the staid mountain and calls, "Come, my Lord!", She sees the pouring rain and dances, "Here comes Narayana!", O, when did he cast such a spell on my tender one?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்