விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உய்வு உபாயம் மற்று இன்மை தேறி*  கண்ணன் ஒண் கழல்கள் மேல்* 
    செய்ய தாமரைப் பழனத்*  தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
    பொய் இல் பாடல் ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்,* 
    வையம் மன்னி வீற்றிருந்து*  விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மற்று - வேறு வழியினால்
உய்வு உபாயம் இன்மை - தரிக்கவிரகில்லாமையை
தேறி - துணிந்து
கண்ணன் - எம்பெருமானுடைய
ஓண் கழல்கள் மேல் - அழகிய திருவடிகள் விஷயமாக,

விளக்க உரை

இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது இப்பாட்டு. இத்திருவாய் மொழியை ஓதுமவர்கள் உபய விபூதியையும் தாம் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவர்களென்கிறார். இத்திருவாய்மொழியினால எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணத்தைப் பேசப் புகுந்தது, பேசித் தலைக்கட்டலாமென்கிற எண்ணத்தினாலன்று; இங்ஙனே பேசினாலல்லது வேறொன்றாலே தரிக்க வொண்ணாமையாலே பேசிற்றென்பதை வெளியிடுகிறார் உய்வுபாயம் மற்றின்மைதேறி யென்பதனால். பொய்யில் பாடலாயிரம்-வால்மீகிபகவானுக்குத் காட்சிதந்த நான்முகக் கடவுள் “***” நதே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி, குரு ராமக தாம் புண்யாம் ச்லோகபத்தாம் மனோரமாம்” அருளிச் செய்ததனால் ஸ்ரீராமாயணம் பொய்யில் பாடலாக அமைந்ததாயிற்று. “வேதநூல் ஓதுகின்றதுண்மையல்லதில்லை மற்றுரைக்கிலே” (திருச்சந்தவிருத்தம்) என்று வடமொழிவேதத்திற்குச் சொல்லப்பட்ட ஸத்யவாதித்வம் தமிழ்வேதத்திற்கும் குறையற்றதென்க. வையம்மன்னி வீற்றிருந்து மண்ணுர்டே விண்ணுமாள்வர்-“பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடே நெடுங்காலமிருந்து இங்கே யிருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்; அங்கேபோனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான்தமர்’ என்கையன்றிக்கே இங்கேயிருக்கச்செய்தே தாங்களிட்ட வழக்காகப்பெறுவர்.” என்பது நம்பிள்ளையீடு.

English Translation

This decad of the faultless thousand songs by Satakopan of kurugur with lotus fields is addressed to the feet of Krishna, sole refuge. Those who can sing it will rejoice here and rule over Heaven

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்