விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னது ஆவி மேலையாய்*  ஏர் கொள் ஏழ் உலகமும்,* 
    துன்னி முற்றும் ஆகி நின்ற*  சோதி ஞான மூர்த்தியாய்,* 
    உன்னது என்னது ஆவியும்,*  என்னது உன்னது ஆவியும்* 
    இன்ன வண்ணமே நின்றாய்*  என்று உரைக்க வல்லேனே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னது ஆவி மேலியாய் - என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய்க் கொண்டு
ஏர்கொள் ஏழ் உலகமும் - அழகிய கைல லோகங்களிலும்
முற்றும் ஆகி நின்ற - ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாம்படி நின்ற
சோதி ஞானம் மூர்த்தியாய் - சோதிமயமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே!
என்னது ஆவி - என் ஆத்மஸ்வரூபம்

விளக்க உரை

எனக்காக ஸகலலோகங்களையும் வியாபித்து என்னையங்கீகரித்த உன் படி பேச்சுக்கு நிலமன்று என்கிறார். என்னதாவி மேலையாய் என்பதற்கு இரண்டுபடியாக நிர்வாஹம்;-என்னுடைய ஸத்தையைப்பெற்று அத்தாலே மிகுந்த ஆனந்தம் படைத்தவனே! என்னுதல்; என்னைப் பெறவேணுமென்கிற ஆவலையுடையவனே! என்னுதல். உள்ளதான சொல்வடிவம் இவ்விரண்டுவகை நிர்வாஹத்திற்கும் எங்ஙனே இடந்தருகின்றதென்னில்; என்னதாவி மேலையாய் என்பதற்கு என்னுடைய ஆவியின் மேலே காட்டிய இரண்டு வகையான கருத்தும் இதில் உறையும்; ஆசைப்பட்ட ஒரு வஸ்துவைப் பெற்றுவிட்டவன் விஷயத்திலும் பெற நினைப்பவன் விஷயத்திலும் இங்ஙனே சொல்லத்தகும் கீதையில் ஸததயுக்தாநாம் என்பதற்கு “ ‘***’ ஸததயோகம் காங்க்ஷமாணாநாம்” என்று எம்பெருமானார் பெர்ருள் பணித்ததும் இங்கு ஒரு புடை நோக்கத்தக்கது. பெற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொல்லுகிற அர்த்தமும், பெறவேணுமென்று ஆவல் கொண்டிருப்பதாகச் சொல்லுகிற அர்த்தமும் ஒன்றோடொன்று பொருந்தாதாதலால் மேலே காட்டிய இரண்டு நிர்வாஹங்களையும் விகல்பமாகக் கூறியிருப்பது எங்ஙனே பொருந்துமென்று சங்கை பிறக்கக்கூடும். இவ்வர்த்தங்களுக்குப் பொருந்தாமையொன்றுமில்லை. ஆழ்வார் விஷயத்திலே எம்பெருமான்பெற நினைத்திருக்கும் அளவுகள் பல பலவுண்டு; அவற்றில் பெற்றுத் தலைக்கட்டியவை சில; இனிப் பெறவேண்டியவை சில; எந்த வஸ்து பெற்றுத்தீர்ந்ததோ, அதிலேயே பெறவிருப்பமும் உள்ளதாகக் கூறினாலன்றோ விரோதமுள்ளது என்றுணர்க.

English Translation

Filling the seven fair worlds, you become them all, O Luminous icon of knowledge, borne by my soul! My soul is yours, your soul is mine; how can I say how?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்