விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கால சக்கரத்தொடு*  வெண் சங்கம் கை ஏந்தினாய்,* 
    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாராயணனே என்று என்று,* 
    ஓலம் இட்டு நான் அழைத்தால்*  ஒன்றும் வாராயாகிலும்,* 
    கோலம் ஆம் என் சென்னிக்கு*  உன் கமலம் அன்ன குரைகழலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காலன் சக்கரத்தொடு - (பகைவரையழிப்பதில்) யமன் போன்ற திருவாழியோடுகூட
வெண் சங்கு -வெளுத்த சங்கத்தை
அம் கை - அழகிய திருக்கையிலே
ஏந்தினாய் - தரித்திருப்பவனே!
ஞாலம் முற்றும் - உலகமுழுவதையும்

விளக்க உரை

‘நான் அன்பினால் நெஞ்சுருகி உன் திருப்பெயர்களைக் கூறிப் பலவாறு அழைத்தாலும், நீ வந்து என் ஆசை தீரச் சிறிதும் காட்சி தருகின்றிலை; ஆனாலும், என் தலைக்கு உன் திருவடியே அணியாய் விளங்குவது; என்று கூறுகின்றார். ‘நீ அருள் புரியாவிட்டாலும் நான் உன் திருவடியையே வணங்குவேன்,’ என்பது கருத்து. (‘என் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழல் கோலமாம்,’ என்று கூட்டிப்பொருள் கொள்க.) அஃதாவது, ‘நீ என்னை மறந்தாலும், நான் உன்னை மறவேன்,’

English Translation

O Narayana, you swallowed the Universe, then made if, I cry and call out, "O Bearer of the wheel-of-time and the white conch!" Even if nothing happens by it, your tinkling lotus-feet become my head's ornaments

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்