விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த*  மாயப் பேய் உயிர்- 
    மாய்த்த,*  ஆய மாயனே! வாமனனே மாதவா,* 
    பூத்தண் மாலை கொண்டு*  உன்னைப் போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூத்தண் மாலை நெடுமுடிக்குப்*  புனையும் கண்ணி எனது உயிரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாய்த்தல் எண்ணி - முடிப்பதாக நினைத்து
வாய் - வாயிலே
முலை தந்த - நஞ்சு தீற்றிய முலையை வைத்த
மாயம் பேய் - பூதனையினுடைய
உயிர் - பிராணனை

விளக்க உரை

பூதனையை முடித்தல் முதலான ஸமயங்களில் விடாய்தீர வந்துநின்று சிசிரோபசாரம் பண்ணப்பேற்றீலேனே யாகிலும் உன் திருமேனிக்கு என்னுயிரே உபகாரமாய்விட்டதே யென்கிறார். கம்ஸன், தன்னைக் கொல்லபிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களின் ஒருத்தியான பூதனையென்னும்; ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் துர்ங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ க்ருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி, அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கிவிழுந்து இறக்கும்படி செய்தனன் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது. “மாய்த்தலெண்ணி” என்றவிடத்து ‘இன்னாரை மாய்த்தல்” என்று விரியச் சொல்லாமையாலே ‘உலகத்தையே மாய்க்கவெண்ணி’ என்றும் பொருள் கொள்ளலாம். ஸகல ஜகச்சரீரியான கண்ணனை நலிய நினைத்தது உலகத்தையே உபஸம்ஹாரம் பண்ண நினைத்தபடி யாகுமன்றோ. அவள் பேயாய் வருகையன்றியே தாயாய் வந்ததனால் ‘மாயப் பேய்’ எனப்பட்டது.

English Translation

O Chief of the cowherd clant O Madava! O Vamana! Killer of the poison-breasted ogress putana, I do not worship you thrice a day with fresh flower garlands, my life is a wreath worthy of being wrapped on your crown

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்