விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூசும் சாந்து என் நெஞ்சமே*  புனையும் கண்ணி எனதுடைய,* 
    வாசகம் செய் மாலையே*  வான் பட்டு ஆடையும் அஃதே,*
    தேசம் ஆன அணிகலனும்*  என் கைகூப்புச் செய்கையே,* 
    ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த*  எந்தை ஏக மூர்த்திக்கே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈசன் - ஸர்வேச்வரனாயும்
ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை - (ஒரு காலத்தில்) உலகங்களையுண்டு (மற்றொரு காலத்திலே) வெளிப்படுத்தின ஸ்வாமியும்
ஏகமூர்த்திக்கு - ஒப்பற்ற திவ்யமங்கள் விக்ரஹத்தையுடையனாயுமிருக்கிற பெருமானுக்கு
பூகம் சாந்து - பூசுவதற்குரிய சந்தனம்
என் நெஞ்சமே- என் மனமேயாகும்;

விளக்க உரை

தமது மனமொழி மெய்களாகிற முக்கரணங்களும் எம்பெருமானுக்குப் பரம யோக்யமாகின்றமையை வியந்து கூறுகின்றார். எம்பெருமானது திருமேனியின் வைலக்ஷண்யத்தையும், அவன்றனக்குத் தம்மிடத்து உண்டான விருப்பத்தையும் சிந்தனை செய்து, முன் சொன்னதையே மீண்டும் வாய்வெருவுகிறபடி. எனதுடைய வாசகஞ்செய்மாலையே புனையுங்கண்ணி எம்பெருமான் பூமாலைகள் அணிந்துகொண்டால் என்ன ஔஜ்ஜ்வல்யமிருக்குமோ அது தமது சொல்மாலைகளை ஏற்றுக் கொண்டதனால் இருக்கின்றதென்றபடி. வான்பட்டாடையும் அஃதே தமது அருளிச்செயலே எம்பெருமானுக்குப் பீதாம் பரமென்கிறார். அழகிய வஸ்த்ரமில்லாதவனுக்கு உலகில் மதிப்பு ஏற்படுவதில்லை; எம் பெருமானுக்கு ஆழ்வாரருளிச் செயல் இல்லையாகில் மதிப்பு ஏற்படாதென்பது உய்த்துணரத்தக்கது. இங்கே நம்பிள்ளையீடு காண்மின்;-“ஆழ்வாருடைய உக்திதானே அவனுக்கு சோபாவஹதமான பரிவட்டமும். இவருடைய பா நல்ல நூலாகையாலே வான் பட்டாடையாயிற்றுக்காணும். ‘நல்ல நூலாகவேணும்’ என்று அடியிலே நோற்று நூற்றவரிறே.”

English Translation

For my Lord, -who swallowed the Universe, then made it, -my heart is the Sandal paste, my poem is a fitting garland and also his radiant vestment. My folded hands are his big radiant jewels

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்