விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெலியும் நோய் தீர்க்கும்*  நம் கண்ணன் கழல்கள்மேல்,* 
    மலி புகழ் வண் குருகூர்ச்*  சடகோபன் சொல்,*
    ஒலி புகழ் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்* 
    மலி புகழ் வானவர்க்கு ஆவர்*  நல் கோவையே. (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மெலியும் நோய் தீர்க்கும் - மெலிவை விளைக்கும்படியான பிரிவுநோயைப் போக்கவல்லவனான
நம் கண்ணன் - நமது கண்ணபிரானுடைய
கழல்கள் மேல்- திருவடி விஷயமாக
மலி புகழ் - வளர்ந்த புகழையுடைய
வண் குருகூர் சடகோபன் - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்

விளக்க உரை

பிரிவால் மெலிகின்ற விரக நோயினைத் தீர்க்கின்ற நம் கண்ணபிரானுடைய திருவடிகளின்மேல் மிக்க புகழையுடைய வளவிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச்செய்யப்பட்ட ஒலி புகழ் ஆயிரம் திருப்பாசுரங்களில் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் மிக்க புகழையுடைய நித்தியசூரிகளோடு ஒரு கோவை ஆவார்கள்.

English Translation

This decad of the thousand beautiful songs by Satakopan of beautiful Kurugur city, is addressed to Krishna's feet, the cure for love-sickness. Those who can sing it will be fitting company for celestials

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்