விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொம்பு போல் சீதைபொருட்டு*  இலங்கை நகர்* 
    அம்பு எரி உய்த்தவர்*  தாள் இணைமேல் அணி,*
    வம்பு அவிழ் தண் அம் துழாய்*  மலர்க்கே இவள்- 
    நம்புமால்,*  நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நங்கைமீர் - பெண்காள்!
கொம்பு போல் சீதை பொருட்டு - பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு
இலங்கை நகர் - இலங்காபுரியில்
அம்பு ஏரி - அம்புகளில் நின்றும் கிளம்பும்  அக்னியை
உய்த்தவர் - செலுத்தின  இராமபிரானுடைய

விளக்க உரை

ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள் விரும்பா நின்றாளென்கிறாள். கொம்பு போல்சீதைபொருட்டு ஸ்த்ரீகளைக் கொம்பனார் என்று கூறுவது தமிழர் மரபு; வஞ்சிக் கொம்புபோல் மிக்க பெருந்தன்மை பொருந்தியிருக்கும்படியைக் கூறியவாறு. கொம்புபோல் என்பதற்கு மற்றொரு பொருளும் நம்பிள்ளை அருளிச் செய்வதுண்டு; “’அநந்யா’ என்கிறபடியே ஏகவஸ்துவில் ஏகதேசமென்னுதல்” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. கொம்பானது வ்ருக்ஷத்தில் ஏகதேசமாகவுள்ளது; “வாஸூதேவதரு” என்றும், “எனக்கே தன்னைத்தந்த கற்பகம்” என்றும் வ்ருக்ஷமாகச் சொல்லப்படுகிறபடியால் அதில் ஏகதேசமான கொம்பாகப் பிராட்டியைச் சொல்லுதல் பொருந்தும். சீதை-ஸீதா என்ற வடசொல் திரிபு. (ஸீதா லாங்கலபத்ததி:) என்ற நிகண்டின்படி உழுபடைக்கு ஸீதா என்று பெயராதலால் ஜநகசக்ரவர்த்தியின் யாகசாலை நிலத்தில் உழுபடை பட்டவிடத்தில் நின்றும் பிராட்டி தோன்றின காரணம்பற்றி அவளுக்கு இலக்கணையினால் ஸீதையென்று பெயராயிற்று. நம்பும்-விருமபும்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”

English Translation

O Ladies, what shall I do? She covets only the fragrance-wafting Tulasi garland on the feet of the Lord, -who gutted Lanka with his arrows, for the love of beautiful Sita

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்