விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மடந்தையை*  வண் கமலத் திருமாதினை,* 
    தடம் கொள் தார் மார்பினில்*  வைத்தவர் தாளின்மேல்,* 
    வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே*  இவள் 
    மடங்குமால்*  வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாள் நுதலீர் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்காள்!
என்  மட கொம்பு இவள் - இளங்கொடி போன்ற எனது இப்பெண்பிள்ளை
மடந்தையை - இளமைப் பருவமுள்ள
வண் கமலம் திரு மாதினை - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியை
தடம் கொள் தார் மார்பினில்- விசாலமானதும் மாலையணிந்ததுமான திரு மார்பிலே

விளக்க உரை

அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள். மூலத்தில்இ அம்ருமதன காலமென்பதற்கு வாசகமான சொல்; இல்லையாகிலும் “திருமாதினை மார்பினில் வைத்தவர்” என்கிற சொல்லமைப்பை நோக்கி “அம்ருதமதந தசையிலே” என்று பூருவசாசாரியர்க்ள உரைத்தருளினர். பிராட்டியைத் திருமார்பிலே கொண்டிருப்பவன் என்னாமல் ‘வைத்தவர்’ என்கையாலும், ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு அவதாரம் ப்ரஸ்துதமாகிவருகிற அடைவுக்குச் சேரவேண்டுகையாலும் இங்ஙனமுரைத்தல் மிகப்பொருந்தும்.

English Translation

O Ladies of radiant forehead! My foolish daughter pines away for the cool fragrant Tulasi garland on the feet of the Lord, -who bears the lotus-dame Lakshmi on his chest

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்