விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தார்க்கு இளந்தம்பிக்கு*  அரசு ஈந்து*  தண்டகம்- 
  நூற்றவள்*  சொற்கொண்டு போகி*  நுடங்கு இடைச்- 
  சூர்ப்பணகாவைச்*  செவியொடு மூக்கு*  அவள்- 
  ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற* 
  அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தார்க்கு - மாலையிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு;
இன - (தகுந்திராத) இனம் பருவத்தை யுடையவனான;
தம்பிக்கு - பரதாழ்வானுக்கு;
அரசு ஈந்து - (அடிசூடுகையாகிற) அரசைக் கொடுத்து,;
நூற்றவள் - (இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய;

விளக்க உரை

கீழ் ‘முடியொற்றி’ என்ற ஆறாம்பாட்டில் கூறியதை இங்கு, “தாரக்கிளந்தம்பிக்காசீந்து” என்று அநுபாஷித்தபடி. “அடிசூடுமாசையல்லால் அரசாகவெண்ணேன் மறறரசுதானே”- இனி, ஈந்து என்பதை எச்சந்திரபாக்கி, கொடுக்க என்னும் பொருளதாகக்கொண்டு, கைகேயியின் சொற்படி பரதாழ்வான் ராஜ்யம் நிர்வஹிக்கக்கடவன் என்று திருவுள்ளம்பற்றி (ராஜ்யத்தை அவனுக்குக் கொடுப்பதாக)க் காட்டுக்கெழுந்தருளி என்றுரைப்பாருமுளர். தார்க்குத்தகாத தம்பிக்கு என்ன வேண்டுமிடத்து, “தார்க்கிளத் தம்பிக்கு” என்றது- காரணங் கூறியவாற்றற் காரியத்தைக் குறித்தவாறாம். (காரியம்- தகாமை; காரணம்- இளமை.) நூற்றவள்- கெட்ட எண்ணமுடையவள் என்பது, கருத்து. (நுடங்கிடை - இத்யாதி.)............................. என்ற வடசொல், சூர்ப்பம் நகம் என்று பிரிந்து, முறம்போன்ற (வடிவமுள்ள) நகங்களை யுடையவள் என்ற பொருள்படும். அது, அவளுக்கு வடிவம்பற்றி வைக்கப்பட்ட காரணத்திற்குரியாகிய இயற்பெயராம். அது பெயராதலால் வடமொழி விதிப்படி, சூர்ப்பணகா என நிலைமொழியின் ரகாரத்தை நோக்கி வருமொழியின் நகாரம் ணகாரமாகத் திரியும்; ‘ராமயணம்’ ‘நாராயணன்’ என்பவற்றிற்போல அங்ஙனம்மாகாமல் சூர்ப்பநகா என்று நிற்கும்போது பெயராகாது தன்மை குறிக்கிற மாத்திரமாம். சூர்ப்பணகை- பிரமபுத்திரராகிய புலஸ்திய முனிவருடைய குமாரராகிய விச்ரவஸ்ஸினது இரண்டாம் மனைவியான கேகஸியின் வயிற்றில் ராவண கும்ப கர்ணர்களுக்குப் பின் விபீஷணனுக்குமுன் பிறந்தவள். இவளை ராவணன் காலகையென்பவருடைய மக்களாகிய காலகேயருள் ஒருவனான வித்யுஜ்ஜிஹ்வனென்னும் அசுரனுக்கு மணஞ்செய்து வைத்திருந்தான்; பின்பு ராவணன் திக்குவிஜயம் செய்கின்றபொழுது அசுமநகரத்தில் புகுந்து அங்கிருந்த காலகேயரை போர்செய்து அழிக்கையில் வித்யுஜ்ஜிஹ்வனும் ராவணனாற் கொல்லப்பட்டதனால், கணவனை இழந்த சூர்ப்பணகை ராவணன் காலில் விழுந்து மிகப் புலம்பிப் பலவாறு முறையிட, அவன் அவட்கு வெகுஸமாதாநங்கூறிக் கோபந்தணிந்து, தண்டகாரண்யத்தைச் சார்ந்த ஜநஸ்தாந மென்றவிடத்தில் ஒரு ராஜ்யமுண்டாக்கி அதில் அவளை மேன்மையோடிருக்கச் சொல்லி, தூஷணனென்ற ஸேகாபதிக்கு உட்பட்டதொரு பெருஞ்சேனையையும், தனது தாயினுடன் பிறந்தவள் மகனான கரனையும், அவளுக்கு உதவியாக இருந்து அவளிட்ட கட்டளைப்படி நடக்குமாறு நியமித்து, அங்கு அவள் யதேச்சையாகத் திரியுமாறு அனுப்பிவிட்டான். அங்ஙனமே அவ்விடத்திற்குடியேறி அங்குளள வநவாஸிகளை வருத்திக்கொண்டு உல்லாஸமாகத் திரியும் தன்மையுள்ள இவள், ஸ்ரீராமலக்ஷ்மணர் ஸீதையோடு பஞ்சவடி ஆச்ரமத்தில் வஸிக்கின்றபொழுது ஒருநாள் இராமபிரானது திருமேனியழகைக்கண்டு பெருங்காதல்கொண்டு அழகிய வடிவமெடுத்து அப்பெருமானருகில் வந்து சேர்ந்து ‘என்னைநீர் மணம் புணரவேண்டும்’ என்று வேண்ட, அவர் ‘எனக்கு ஒருத்தி இங்கே உளள்; தனியாயிருக்கின்ற என் தம்பியை வேண்டிக்கொள்’ என்றார். அவளும் லக்ஷமணனிடத்துச் சென்று வேண்ட, அதற்கு அவர் சில காரணங்களைக் கூறி மறுக்க, பின்பு அவள் “சீதையைக் கொன்றுவிட்டால் இராமன் என்னை மணம் புரியக்கூடும்” என்றெண்ணிப் பிராட்டியைப் பிடித்துண்பதாகப் பதறியபடியைக் கண்ட ஸ்ரீராமன் இளையபெருமானை நோக்கி ‘நீர் இவளுடைய அங்கங்களைப் பங்கப்படுத்தும்’ என்று நியமிக்க, அங்ஙனமே அவர் ஓடிவந்து அவளை மறித்து அவளது மூக்கு, காது, முதலிய சில உறுப்புகளை அறுத்திட்டார் என்ற வரலாறு அறிக. வேண்டினபடி வடிவங்கொள்ளும் ஆற்றல் அரக்கரிலும் அரக்கியரிலும் பலர்க்குத் தபோபலத்தாலும் மந்த்ரபலத்தாலும் உண்டென்பது இங்கு உணரத்தக்கது. இவள், லக்ஷ்மியைத்தியானித்து ஒரு மந்திரத்தை ஜபிதபுது நினைத்தபடி அழகிய வடிவம் பெற்றவன் என்பர் கம்பர். “***“ என்றபடி – இங்ஙனம் இவளை அங்கப்பங்கப்படுத்தியது இராமபிரானது திருத்தம்பியான இளையபெருமானது செய்கையாயிலும், இப்பாட்டில் அதனைப் பெருமாள்மேல் ஏற்றிச் சொன்னது. இராமபிரானது கருத்துக்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி இவன் செய்தனனாதலின், ஏவுதற்கருத்தாளின் விளையாதல்பற்றியென்க. அன்றியும், இளையபெருமாளும் திருமாலினது திருவ்வதாரமே யாதலால், அங்ஙனஞ் சொல்லதட்டில்லை. மற்றும், “***“ என்றபடி இராமனுக்கு லக்ஷ்மணன் வலத்திருக்கை யெனப்படுதலால், அங்ஙனம் கையாகிற லக்ஷ்மணனது செயல் இராமன்மேல் ஒற்றுமை நயம் பற்றிஏற்றிச்சொல்லுதல் தகுதியே. “அரக்கி மூக்கநீக்கிக் கரனோடு தூடணன்றேனுயிரை வாங்கி“ என்று குலசேராழ்வாரும், “தன்சீதைக்கு, நேராவனென்றோர் நிசாசரிதான் வந்தாளைக் கூரார்ந்தவாளாற் கொடிமூக்குங் காதிரண்டும், ஈராவிடுத்து“ என்று திருமங்கையாழ்வாரும், “தன்சீதைக்கு, நேராவனென்றோர் நிசாசரிதான் வந்தாளைக் கூரார்ந்தவாளாற் கொடிகூக்குங் காதிரண்டும், ஈராவிடுத்து“ என்று திருமங்கையாழ்வாரும், “அரக்கி மூக்கினொடு வார்காது மீர்ந்தார்வரை“ என்று பிள்ளைப் பெருமாளையங்காரும் அருளிச்செய்துள்ளமை காண்க. “தம்முடைய கையாலேயிறே தண்டிப்பது.....தம்முடைய தோளாயிருக்கிற இளைபெருமாளை இடுவித்துத் தண்டிப்பித்தா“ என்பது – பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செயல். “ஆவீறையும்“ என்ற நன்னூல் விதிப்படி “சூர்ப்பணகை“ எனத்திரிய வேண்டியிருக்க, அங்ஙனந்திரியாதது * புதியனபுகுதலென்னலாம், “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே” என்றார் நன்னூலார்.

English Translation

Listening to the words of the scheming Kaikeyi, he gave the kingdom to the younger brother Bharata. Entering the Dandaka forest, he cut off the slender-waisted Surpanakha’s ears and nose and she shrieked. Sing his glory and swing. Sing of the Ayodhya’s king and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்