விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வல்லி சேர் நுண் இடை*  ஆய்ச்சியர் தம்மொடும்,* 
    கொல்லைமை செய்து*  குரவை பிணைந்தவர்,* 
    நல் அடிமேல் அணி*  நாறு துழாய் என்றே 
    சொல்லுமால்,*  சூழ் வினையாட்டியேன் பாவையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூழ் வினையாட்டினேன் -மிகுந்த தீவினையை யுடையனோகிய  என்னுடைய
பாவை - பதுனம் போன்ற பெண்ணானவன்
வல்லி சேர் - கொடி போன்று
நுண் - நுட்பமான
இடை - இடுப்பையுடைய

விளக்க உரை

கண்ணபிரான் ஆய்ச்சிகளோடு கூடிக் குரவை கோத்தகாலத்துச் திருவடியிலணிந்து கொண்டிருந்த திருத்துழாய் மாலையை என்மகள் வாய் வெருவுகின்றாளென்கிறாள். குரவை யெனபது ராஸக்ரிடை யெனப்படும். ஒவ்வொரு கண்ணனாகப் பல திருவுருவங்கொண்டு கைகோத்தாடினது வடமொழியில் ராஸக்ரிடை யென்றும், தென்மொழியில் குரவை கூத்தென்றும் வழங்கப்பெறும். வல்லிசேர்நுண்ணிடையாய்ச்சயர்-‘வல்லிசேர்’ என்பதை இடைக்கு விசேஷணமாக்குதலுமுண்டு; ஆய்ச்சியர்க்கே விசேஷணமாக்குதலுமுண்டு; முந்தினபக்ஷத்தில், கொடி போன்ற இடையை யுடையவர்களென்னுதல்; பிந்தினபக்ஷத்தில் பொடிபோன்றவர்களாயும் நுட்;பமான இடையை யுடையராயுமிருக்கின்ற ஆய்ச்சிகளென்னுதல். கொல்லைமைஸ்ரீ வரம்பு கடந்த செயல்; ‘கொல்லை’ என்னும் சொல்லின்;மீது மைவிகுதி ஏறிக்கிடக்கிறது. “கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட” என்ற ஆண்டாள் பிரயோகமும் “கொல்லை யென்பர் கொலோ” என்ற நம்மாழ்வார் பிரயோகமும் காணத்தக்கன. கூரத்தாழ்வான் அதிமாநுஷஸத்தில் “துர்ர்த்தாயிதம் யத் கில ராஸகோஷ்ட்யாம்” என்ற தில் துர்ர்த்தாயிதம் என்றதுவே கொல்லையாகும். பாவை= பதுமைக்குப் பெயர்; இது, உவமையாகுபெயராய்ப் பெண்பிள்ளளையையுணர்த்தும்.

English Translation

O, The vicious snare trapping my daughter She asks for the fragrant Tulasi from the feet of the Lord, -who unabashedly played amorous sport with cowherd-girls of tendril-thin waists

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்