விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாலன் ஆய்*  ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,* 
    ஆல் இலை*  அன்னவசம் செய்யும் அண்ணலார்,* 
    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    மாலுமால்,*  வல்வினையேன்*  மட வல்லியே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாலன் ஆய் - சிறு குழவியாகி
பரிவு இன்றி - அநாயாஸமாக
ஏழ் உலகு உண்டு - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து
ஆல்இலை - ஆலந்தளிரிலே
அன்னவசம் செய்யும்- நித்திரை செய்தருளின

விளக்க உரை

பண்டு ஆவிலையில் பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேணுமென்று என் மகள் (பாரங்குசநாயகி) ஆசைப்படுகின்றாளென்று திருத்தாயார் கூறுகின்றான். இவ்வுலகமெல்லாம் பிரளய வெள்ளத்தில் அழுந்தி அழியப்புகுங்கால் எம்பெருமான் இவற்றையெல்லாம்; தனது திருவயிற்றிலே வைத்து ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்ததாக நூற்கொள்கை. அது என்றைக்கோ நடந்த விஷயம். அப்போது அந்த வடதனசாயிப் பெருமானுடைய தாளிணை மேலணிந்த தண்ணந்துழாய்மாலையை இப்போது என் மகன் அபேகூஷிக்கின்றாளேயென்கிறாள். பாலனாய் என்ற சொல்லாற்றலால் நம்பிள்ளை அருளிச் செய்தாவது-‘பருவம்நிரம்பின பின்பு லோகத்தை யெடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில் என் மகள் இப்பாடுபடாள் கிடீர்” என்பதற்காக. வயது சென்றவனாயிருந்து இவ்வருந்தொழில் செயதால் அவ்வளவாக ஈடுபடவேண்டியிராது; பச்சைப்பசுங் குழந்தையாயிருந்து கொண்டு செய்த செயலாகையாலே ஈடுபாடு மிக்கது போலும்.

English Translation

Alas, My frail daughter swoons, asking for the cool Tulasi from the feet of the Lord, -who swallowed the seven worlds with ease, and slept as a child on a fig leaf.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்