விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அஃதே உய்யப் புகும் ஆறு என்று*  கண்ணன் கழல்கள் மேல்,* 
    கொய் பூம் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,* 
    செய் கோலத்து ஆயிரம்*  சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,* 
    அஃகாமல் கற்பவர்*  ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உய்யப் புகும் ஆறு - உஜ்ஜீவநோபாயம்
அஃதே என்று - திருநாராணன் தாள்களேயென்று அறுதியிட்டு
கண்ணன் - எம்பெருமானுடைய
கழல்கள் மேல் - திருவடிகள் விஷயமாக
கொய் பூ - திருவடிகள் விஷயமாக

விளக்க உரை

துயரங்கள் தீர்ந்து ஆத்மோஜ்ஜூவநம் பெறுவதே இத்திருவாய்மொழி கற்பதற்குப் பலன் என்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார். எம்பெருமானது திருவடிகளே உபாயமென்று அத்திருவடிகள் விஷயமாக ஆழ்வார் வாசிக கைங்கர்யரூப்மாய் அருளிச்செய்ததும் ஸர்வாலங்கார பூர்ணமுமான ஆயிரத்தினுள் இவைபத்தையும் குறையறக் கற்பவர்கள் ஐச்வர்ய கைவல்யங்களிலே ஆழங்காற்பட்டுவரும் கிலேசம்நீங்கி பகவத் கைங்கர்ய மஹாரஸத்தைப் பெறுவாரென்றதாயிற்று. அஃதே என்றது-இப்பதிகத்தின் முதற்பாட்டிலும் இப்பாட்டிலும் ப்ரஸ்துதமான திருவடியைக் குறிக்கும். செய்கோலத்தாயிரம் என்றவிடத்து “உத்ர்த்தாதி பதக்ரம ஜடாவாக்ய பஞ்சாதிபாதவ்ருத்த ப்ரசநகாண்ட அஷ்டகாத்யாயாம்சபர்வாதி அலங்காரங்கள்போலே எழுத்தசைசீர்ப்பந்தமடி தொடை நிரைநிரையோசை களையினம்யாப்புப் பாத்துறை பண்ணிசை தாளம் பத்து நூறாயிரம் முதலான செய்கோல மிதுக்குமுண்டு” என்ற ஆசார்யஹருதய திவ்யஸூக்தியும் அதன் வியாக்கியானமும் அநுஸந்தேயம். உய்யப்பாலோ என்ற பாடத்தினும் ‘உய்யற்பாலரே’ என்ற பாடம் தகும்.

English Translation

This decad of the beautiful thousand songs, by Satakopan of dense flower-groved Kurugur, is addressed to the feet of Krishna, sole refuge. Those who learn it shall rise from deep despair and be elevated

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்