விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காளியன் பொய்கை*  கலங்கப் பாய்ந்திட்டு*  அவன்- 
  நீள்முடி ஐந்திலும்*  நின்று நடம்செய்து*
  மீள அவனுக்கு*  அருள்செய்த வித்தகன்* 
  தோள்-வலி வீரமே பாடிப் பற* 
  தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காளியன் பொய்கை - காளியன் கிடந்த பொய்கையானது;
கலங்க - கலங்கும்படி;
பாய்ந்திட்டு - (அதில்) குதித்து;
அவன் - அக்காளியனுடைய;
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து - ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து   படங்களின் மேலும் நின்று கூத்தாடி,;

விளக்க உரை

கீழ். “பஞ்சவர்தூதனாய்” என்ற ஐந்தாம்பாட்டில் அருளிச் செய்யப்பட்ட காளியவ்ருந்தாந்தந்தன்னையே மீண்டும் இப்பாட்டால் அருளிச் செய்வாரென் எனில்; மற்ற சந்ருக்களிற்காட்டில் காளியன் மிக்க கொடியனாதலால் அவன் கொழுப்பையடக்கின உபகாரஸ்ம்ருதி; அதனை ஒரு நாற் சொல்லி நிற்கவொட்டிற்றில்லை யெனக்கொள்க. சகடம், பூதளை முதலிய தீர்ப்பப்பூடுகள் கண்ணபிரா னொருவனுக்கே தீங்குவிளைக்கக் கருத்துக்கொண்டன; காளியன் அங்ஙனன்றிக்கே, தான் கிடந்த பொய்கையை அணுகின ஸ்தாவர ஜங்கமாதிகளெல்லாம் தன் விஷத்தின் அழலாலே பட்டுவிழும்படி ஒரூர்க்கடங்கத் தீங்குசெய்து போந்தமையால் இவனது கொடுமை பேச்சுக்கு நிலமன்றே.

English Translation

Kaliya’s lake turned turbid as he jumped on the five big hoods, stood and danced, and showered his grace thereafter. Sing his glory and swing, sing of the gem-hued Lord and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்