விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது*  மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,* 
    ஆழ்ந்தார் என்று அல்லால்*  அன்று முதல் இன்று அறுதியா,*
    வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்*  என்பது இல்லை நிற்குறில்,* 
    ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி*  அண்ணல் அடியவர் ஆமினோ.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா மழை மொக்குளின் - பெருமழையில் தோற்றும் நீர்க்குமிழிபோலே
மாய்ந்து மாய்ந்து - அழிந்தழிந்து
ஆழ்ந்தார் என்று அல்லால் - அதோகதியைபடைந்தனர் என்று சொல்லப்படுவது தவிர
அன்று முதல் - பரஹ்மஸ்டிருஷ்டி காலம் தொடங்கி
இன்று அறுதி ஆ வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை - வாழ்ந்தவர்கள் ஒரு தன்மையாக வாழ்ந்தேயிருத்தல் கிடையாது;

 

விளக்க உரை

உரை:1

உலகில் வைத்யர்களுக்கு ஒரு வழக்கமுண்டு; அதாவது-தாம் சிகித்ஸை செய்தவிடங்களில் நூற்றுக்கணக்கான பேர்கள் மாண்டுபோயிருந்தாலும், தெய்வவசமாக நாலைந்துபேர்கள் தப்பிப் பிழைத்தவாகளிருந்தால் அவர்களை மாத்திரம் விரலிட்டு எண்ணிக்காட்டி ‘அவன் பிழைத்தான், இவன் பிழைத்தான், என்று சொல்வதுண்டு; அது போலவே, இவ்வுலகில் நன்றாக நெடுக வாழ்ந்தவர்களும் பலர் இருக்க அவர்களைவிட்டு முடிந்தவர்களை எண்ணுகிறதென்? நீடுழி ஜீவித்தவர்களும் இல்லையோ? என்ன; அதற்கு விடை கூறுகின்றாரிப்பாட்டில்-ஸ்ருஷ்டி காலந்தொடங்கி இன்றளவும் செல்வம் குன்றுமே ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோமென்கிறார். வாழ்ந்தவர்களாக உங்களால் நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்த அழகு தெரியாதோ? அவர்கள் வாழ்ந்தாலும் மழைப்பெருக்கிலுண்டாகும் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்து, ஜீவித்தநாள் பண்ணினபாபத்தாலே அதோகதியிலே விழுந்து ஒழிந்துபோனவத்தனையொழிய, ப்ரஹ்மஸ்ருஷ்டி ஏற்பட்ட காலம்முதல் இன்றளவும் நன்கு ஆராய்ந்து பார்த்துக்கொள்ளலாம்; வாழ்ந்தவர்கள் ஒருபடியாக வாழ்ந்தே போந்தார்கள் என்பது கிடையாது; வாழ்வும் கேடும் கலந்த கட்டியாயிருக்குமே யல்லது ஒரே வாழ்வு என்பது எங்கும் காணக் கிடைக்காது; அங்ஙனன்றிக்கே நிலைநின்ற வாழ்ச்சியை விரும்பியிருந்தீர்களாகில், கூஷீரஸாகரசயனனான பெருமானுக்கு அடியவரென்று பேர்பெற்று வாழப்பாருங்கோள் என்றாராயிற்று.

உரை:2

உலகம் தொடங்கி இன்றுவரை வாழ்ந்தவர் ஒருவருமில்லை. எல்லோருடைய வாழ்வும் மழைநீரில் தோன்றும் குமிழி போல நிலையற்றது.அதனால் நிலையான பேறுபெற எம்பெருமானுக்கு அடியவராவதே வழி என்று நம்மாழ்வார் நம் உடம்பு நிலையற்றது என்று நான்கே வரிகளில் ஒரு உவமை கூறி நம் மனதில் பதிய வைக்கிறார்.

English Translation

Those lived well did so like bubbles in a mighty shower. Those who have lived forever are naught, if you wish to live well and remain, serve the Lord who reclines in the deep ocean

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்