விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பணிமின் திருவருள் என்னும்*  அம் சீதப் பைம் பூம் பள்ளி,* 
    அணி மென் குழலார்*  இன்பக் கலவி அமுது உண்டார்,* 
    துணி முன்பு நால*  பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,* 
    மணி மின்னு மேனி*  நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் சீதம் பை பூ பள்ளி - அழகும் குளிர்ச்சியும் விஸ்தாரமுமுள்ள பூம்படுக்கையிலே
திரு அருள் பணிமின் என்னும் - (மாதர்காள்!) கிருபை பண்ணவேணும்’ என்று பிரார்த்திப்பவர்களாய்
அணி மென் குழலார் இன்பம் கலவி அமுது உண்டார் - அழகிய மெல்லிய கூந்தலையுடைய மாதர்களின் சிற்றின் பக்கவலியமுதத்தை அனுபவித்தவர்களானவர்கள்
துணி முன்பு நால - அரைத்துணி (பின் பக்கத்திற்கு எட்டம் போராமல்) முன்புறத்தில்மாத்திரம் தொங்கும்படியான ஏழையையடைந்து

 

விளக்க உரை

- சிற்றின்பத்தின் நுகர்ச்சியும் அஸ்திரமாதலால் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லி வாழுங்களென்கிறார். இப்பாட்டின் முன்னடியை அந்வயிப்பதில் நிர்வாஹ பேதமுண்டு; அம்சீதப்பைம்பூம் பள்ளியிலே திருவருள் பணிமின் என்று அன்புடன் வேண்டுகிறவர்களான அணிமென்குழலாருடைய இன்பக்கல்வி யமுதத்தையுண்டவர்கள்-என்பது பூருவர்களின் நிர்வாஹம். இப்போது ‘பணிமின் திருவருளென்னும்” என்பது அணிமென் குழலாருக்கு விசேஷணமாயிற்று. “பணிமின் திருவருள்” என்பதற்கு-கிருபை பண்ணவேணும் என்று பொருள். இங்ஙனே ஸ்த்ரீகள் பிரார்த்திக்கும்படியாக இருந்து இன்புற்றவர்கள் என்றதாயிற்று. “பணிமின்திருவருள்” என்று சொல்லுகிற வார்த்தை ஸ்த்ரீகளினுடையது என்று நிர்பஹிப்பதிற்காட்லும் அநுபோக்தாக்களான புமான்களுடையது என்றே நிர்வஹிப்பது அழகியது என்று திருவுள்ளம்பற்றிய பட்டர் “பணிமின் திருவருளென்னும்” என்பதை “இன்பக்கலவி யமுதுண்டார்க்கு விசேஷணமாக்கி யுரைப்பாராம், கீழே “அடிசேர்முடியினராகி அரசர்கள் தாந்தொழ” என்று மஹாராஜர்களால் தொழுதிறைஞ்சப்படுமவராகக் கூறப்பட்டவர்களுக்கு ஸ்த்ரீகளால் பணிமின் திருவருளென்னப் பெறுகை ஓர் ஏற்றமல்லாமையாலே, ஸ்த்ரீகளிடத்திலே இவர்கள் ‘பணிமின் திருவருள்’ நன்று என்று பட்டர் திருவுள்ளம் போலும். அவ்வரசர்களின் ரஸிக சக்ரவர்த்தித்வத்தைக் காட்டியவாறு.

English Translation

They who enjoyed sweet union with coiffured dames, -who vied with one another to give favours on soft cool flowery beds, -do now roam wearing a loin-cloth, scorned and laughed at by all, Live by uttering the name of the Lord of radiant gem-hue

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்