விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நினைப்பான் புகில் கடல் எக்கலின்*  நுண்மணலில் பலர்,* 
    எனைத்தோர் உகங்களும்*  இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,* 
    மனைப்பால் மருங்கு*  அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,* 
    பனைத் தாள் மத களிறு அட்டவன்*  பாதம் பணிமினோ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மனைப்பால் - தாங்களிருந்த வீட்டின் இடம்
மருங்கு அற - சுற்றுப்பக்கங்களோடும்கூடத் தொலையும்படி
மாய்தல் அல்லால் - அழிந்து போவது தவிர
மற்ற கண்டிலம்.-  வேறொன்றும் பார்த்தோமில்லை; (ஆதலால்)
பனை தாள் -  பனைமரம் போன்ற அடியையுடைய

 

விளக்க உரை

மதிப்பு கெடுவதுமாத்திரமன்றிக்கே ஆயுளும் நிலைநில்லாதாகையாலே எம்பெருமான் திருவடிகளை வணங்குகளென்கிறார். நெடுநாள் இவ்வுலகையாண்டு கழிந்து போனவர்களான ப்ரபுக்கள் எத்தனைபேர்கள் இருப்பார்களென்று நினைக்கத் தொடங்கினால், கடலில் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை எண்ணி முடித்தாலும் முடிக்கலாம்; அவர்களை எண்ணி முடிக்கப்போகாது என்னுமித்தனை. மனைப்பால் மருங்கற மாய்தல்லால் மற்றுக்கண்டிகை-கீழ்ச்சொல்லப்பட்டவர்கள் முடியுமளவில் தாங்கள் இருந்த மனைக்கும் அதன் சுற்றுப்பக்கங்களுக்கும் வாசி தெரியாதபடி அழிந்துபோவது தவிர, வேறு மிகுந்திருப்பது ஒன்றுண்டாகக் கண்டிலோம் என்றபடி. பெருமரம் அருகுநிற்கும் மரங்களையும் அழிக்குமாபோலே அக்கம்பக்கத்திலுள்ளவர்களையும் அடியிறுத்திக் கொண்டு போகின்றமையைச் சொன்னபடி. ஆதலால், குவலாயபீட மதயானையைக் கொன்றொழித்த பெருமானுடைய திருவடிகளைப் பணியுங்கள் என்கிறார். பனைபோன்ற கால்களையுடைய யானை என்றதனால் அதன் அதிபயங்கரத்வம் தெரிவிக்கப்பட்டதாம்.

English Translation

Begin to count, the kings that have come to rule the Earth over the ages and left are more numerous than the grains of sand in the dunes. Other their forts razed to the ground, nothing do we see or hear of them, worship the feet of the Lord who killed the rut-elephant

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்