விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடி சேர் முடியினர் ஆகி*  அரசர்கள் தாம் தொழ,* 
    இடி சேர் முரசங்கள்*  முற்றத்து இயம்ப இருந்தவர்,* 
    பொடி சேர் துகளாய்ப் போவர்கள்*  ஆதலில் நொக்கெனக்,* 
    கடி சேர் துழாய்முடிக்*  கண்ணன் கழல்கள் நினைமினோ. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடிசேர் முடியினர் ஆகி - தமது காலிலேபடிந்த கிரிடத்தையுடையவராகி
அரசர்கள் தாம் - மஹாப்ரபுக்கள்
தொழ - வணங்கும்படியாகவும்
இடி சேர் முரசங்கள் - இடியோடு ஒத்த பேரிகைகள்
முற்றத்து - தம் தம் மாளிகைமுற்றத்திலே

 

விளக்க உரை

மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே வாழ்ந்தவர்கள் அந்தச் செல்வக்கிடப்பை யிழந்து ஒருவரும் மதியாதபடி யாவர்களென்கிறார். “அரசர்கள்தாம் தொழ” என்றவிடத்து ‘தாம்’ என்றது முதல் வேற்றுமைச் சொல்லுருபு என்று தமிழர்கள் சொல்லிப் போவார்கள்; நம் ஆசாரியர்கள் அதற்கும் ஒரு கருத்து அருளிச்செய்வர்கள்; இங்கு ஈடுகாண்மின்;-“(தாம் தொழ) தாங்களறிந்ததாகத் தொழுமித்தனை போக்கி இவனிப்படி தொழுதான் என்னும் ப்ரதிபத்தி அவனுக்கில்லை: ‘இன்று ஸ்ரீபாதத்திலே தலைதாக்கத் தெண்டனிடப்பெற்றோம்’ என்று இவர்கள் தாம் நினைத்திருக்குமத்தனை.” -தொழப்படுகிற அரசர்கள் லக்ஷியம் பண்ணாதிருக்க, தொழுமவர்கள் தாங்கள் ஸத்தை பெறுவதாக நினைத்துத் தொழுகிற மாத்திரமேயுள்ளது என்று காட்டினபடி. இங்ஙனே பல அரசர்கள் தொழச்செய்தேயும் அவர்களை அநாதரித்து ஆடல் பாடல் கண்டு போதுபோக்கிக் கிடக்கும்படியைக் கூறுவது இரண்டாமடி. இடியிடித்தாற்போலே ஒலிக்கின்ற பேரிகைகள் தமது மாளிகை முற்றத்திலே சப்திக்க, அதிலே செவிமடுத்து அந்யபாராய்ச் செருக்கிக்கிடந்தவர்கள் என்றபடி. பொடி சேர்துகளாய்ப் போவர்கள்-தம் காலிலே குனிந்தவர்களை லக்ஷியம் பண்ணாதிருக்கும்படியான மதிப்பை யுடையராயிருந்தவர்கள், தம் தலையிலே ஒருவன் அடியிட்டால் ‘நாம் இவனை தலையிலே அடியிட்டோம்’ என்று நினைக்க வேண்டாதபடி அற்பமான துகளாய்ப் போவர்கள் என்றபடி. ஆதலால் சுடர்முடி மேல்புனைந்த தண்ணந்துழாயுடையம்மானது திருவடிகளை விரைவாக நினையுங்கள் என்கிறார். முரசம்-முரஜ: என்ற வடசொல் விகாரம்.

English Translation

Quick, think of the fragrant Tulasi-weather Krishna's feet. They who ruled over other kings who touched their feet, with great kettledrums rumbling in their portices, have become pulverised to dust

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்