விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உய்ம்மின் திறைகொணர்ந்து*  என்று உலகு ஆண்டவர்,*  இம்மையே 
    தம் இன்சுவை மடவாரைப்*  பிறர் கொள்ளத் தாம் விட்டு* 
    வெம் மின் ஒளிவெயில்*  கானகம் போய்க் குமைதின்பர்கள்,* 
    செம்மின் முடித் திருமாலை*  விரைந்து அடி சேர்மினோ. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திறை கொணர்ந்து - செலுத்தவேண்டிய கப்பத்தைக் கொண்டுவந்து கட்டி
உய்ம்மின் என்று - பிழைத்துப்போங்கள் என்று கட்டளையிட்டுக்கொண்டு
உலகு - இவ்வுலகத்தை
ஆண்டவர் தாம் - பிரபுக்கள் தாம்
இம்மையே - இப்பிறப்பிலேயே
 

விளக்க உரை

மஹாப்ரபுக்களாயிருந்து நெடுங்காலம் தாங்கள் ஆண்ட ராஜ்யங்களை யிழப்பார் என்றது கீழ்ப்பாட்டில்; அரசாளுகிறநாளில் போக்யைகளாகக் கைக்கொண்ட மடவார்களையும் பகைவர்க்குப் பறிகொடுத்துப் பரிதாபப்படுவர்களென்கிறாரிதில். உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகாண்டவர்-எதிரிகளின் ராஜ்யங்களைத் தாங்கள் ஆக்கிரமிக்க நினைத்தால் யானை குதிரைபடை திரட்டிக் கொண்டு சென்று பொருது பரிச்ரமப்பட்டு ஆக்ரமித்துக்கொள்ளுகையன்றிக்கே ஒரு கட்டளை மாத்திரத்தாலேயே க்ருதக்ருத்யர்களாக ஆய்விடுவர்களாம்; அதாவது-‘உயிர் தப்பிப் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் நம்பக்களில் கப்பஞ் செலுத்தி வாழ்ந்துபோங்கள்’ என்று ஒரு கட்டளை தெரிவித்தமாத்திரத்திலேயே பகைவர்கள் பணிந்து நிற்பர்களாயிற்று: இவ்வளவு பெரு மிடுக்காக உலகத்தை ஆண்ட ஸார்வபௌமர்கள் என்றபடி, திறை என்று கப்பத்திற்குப் பெயர். இங்ஙனே வாழ்ந்த மஹாப்ரபுக்கள் ஸமயவிசேஷங்களிலேபடும் எளிவரவை மேல் இரண்டடிகளால் அருளிச்செய்கிறார். தாம் அரசாட்சி புரிகிற நாளில் பல திசைகளிலிருந்தும் சிறந்தமாதர்களைத் திரட்டிக்கொணர்நது சேமித்து வைப்பதுண்டேர் அவர்களையெல்லாம் பகைவர் வந்துபுகுந்து கைக்கொள்ளும் படியாகும். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-‘இது நரகபுரமிழந்த என்று கண்டதிறே; பாண்டவர்களுடைய ராஜஸூயமும் செருக்கு மெல்லாங்கிடக்க த்ரௌபதி ஸதஸ்ஸிலே பரிபூதையானவதுவேயிறே இதில் ப்ரமாணம்” என்பதாம். “மன்னு நரகன்றன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து, கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன்” என்ற பாசுரத்தினால் நரகாசுரனுடைய இழவு அறியத்தக்கது. பாண்டவர்களின் பரிபவம் ஜகத்ப்ரஸித்தம்.

English Translation

Come quick and join the feet of the Lord with a radiant crown! They who ruled the world over vassals who paid them tribute, now leave their harems for others to enjoy their queens, and spend their days in misery under the blazing forest Sun

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்