விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த*  தனிமுதல் ஞானம் ஒன்றாய்,* 
    அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்*  அருவு ஆகி நிற்கும்,*
    வளர் ஒளி ஈசனை மூர்த்தியை*  பூதங்கள் ஐந்தை இருசுடரை,* 
    கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி*  யான் என்றும் கேடு இலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எங்கும் - எவ்விடத்திலும்
தளர்வு இன்றியே - ஆயாஸமில்லாமல்
பரந்த - வியாபித்திருக்குமவனாய்,
தனி முதல் ஞானம்-  அத்விதீயமாய் ஸமஸ்த காரணமான ஞானமே வடிவெடுத்தவனாய்
அளவு உடை- அளவுபட்ட

 

விளக்க உரை

அனைவர்க்கும் அந்தராத்தபூதனான ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றின நான் ஒரு அழிவையுமுடையேனல்லேனென்கிறார். “தளர்வின்றியே யென்று மெங்கும் பரந்த” என்றது எம்பெருமானுக்கு விசேஷணம். எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்தும் தன்னுடைய நியாமகத்வசக்திக்குத் தளர்த்தியில்லாது பூர்த்தியோடே வியாபித்திருக்குமவன் என்றபடி. “தனிமுதல் ஞானமொன்றாய்” என்றது - ஸகலப்ரபஞ்சஸ்ருட்டிக்கும் வேறொருகருவி வேண்டாதபடி ஸங்கல்ப்ரூப ஜ்ஞானமொன்றையே அத்விதீய ஸாதனமாகவுடையவன் என்றபடி. தனிமுதல் என்பதையும் எம்பெருமானுக்கே அடைமொழியாக்குதலுமுண்டு. செவி வாய் கண் மூக்குடலென்னும் ஐம்புலன்கள் அற்பவிஷயங்களை க்ரஹிக்கவல்லவையேயன்றி, அபரிச்சிந்ந விஷயமான எம்பெருமானை க்ரஹிக்க முடியாதவன். உழக்காலே கடலை முகக்கவொண்ணாதாப்போலே ஐம்புலன்களால் அறியவொண்ணாதபடி அவற்றுக்கு அவ்விஷயமாயிருப்பவன் என்கிறது இரண்டாமடியால், அளவுடையைம்புலன்களென்றது- அளவுபட்ட விஷயங்களை கிரஹிக்கவே ஏற்பட்ட பஞ்சேந்திரியங்களென்றபடி.

English Translation

The first-cause Lord of effulgent knowledge, pervader of all, stands as a formless being unknown to the five senses. He is the radiant Krishna, effulgent icon, the orbs and the elements, I have attained him, and overcome my pall.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்