விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முடி ஒன்றி*  மூவுலகங்களும் ஆண்டு*  உன்- 
  அடியேற்கு அருள் என்று*  அவன்பின் தொடர்ந்த* 
  படியில் குணத்துப்*  பரத நம்பிக்கு*  அன்று- 
  அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற* 
  அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முடி ஒன்றி - ‘திருமுடிசூடி;
மூ உலகங்களும் - பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்றுலோகங்களையும்;
ஆண்டு - பரிபாலித்துக்கொண்டு;
உன் அடியேற்கு அருள் என்று - தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ணவேணும்” என்று வேண்டிக்கொண்டு;
அவன் பின் தொடர்ந்த - பெருமான்பின்னே தொடர்ந்து வந்த;

விளக்க உரை

பரதாழ்வான் கேகயநாட்டிலிருந்து அயோத்திக்கு வந்து அங்கு நிகழ்ந்ததை அறிந்து இராமன் வனம்புக்கமைக்கு மிகவும் வருந்தி, தந்தைக்குரிய அந்திமக்கிரியைகளைச் செய்துமுடித்து, இராமனை அழைத்து வந்து முடிசூடுவிக்கக்கருதி, தான் அரசியலைத் துறந்து மாவுரிபுனைந்து தாய்மார் முதலியோரோடு சேனை சூழ வனம் புகுந்து, சித்திரகூடத்தில் இராமபிரானைக்கண்டு திருவடி தொழுது, அவரை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு வேண்ட, இராமபிரான் தந்தைசொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வநவாஸங்கழித்துப் பின்னர் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு வேண்ட, இராமபிரான் தந்தை சொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வநவாஸங்கழித்துப் பின்னர் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு நியமித்து, தனக்குப் பிரதியாகத் தனது திருவடிநிலங்களைத் தந்தனுப்பியருளினனென்ற வரலாறு அறியத்தக்கது. முடி ஒன்றுதல்- முடிபொருந்துதல் அருள்- முன்னிலை ஏவலொருமை வினைமுற்று, ‘நமது தாய் நன்று செய்தாள், நாம் சுகமாகவாழலாம்படி நமக்குப் பெரிய ராஜ்யம் கிடைத்ததன்றோ’ என்று மேனாணித்திராது ஸ்ரீராமவிச்லேஷத்தால் மிகவும் வருந்தினமையால், “படியில் குணத்துப் பரதநம்பி” என்றார்; இதிலும் விஞ்சின குணமில்லையே. அடிநிலை- மாவடி...

English Translation

The peerless brother Bharata followed him and said, “Wear the crown and rule the three worlds, grace your devotees”. Then the Lord gave his sandals. Sing his praise and swing, sing of the Ayodhya prince and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்