விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துன்பமும் இன்பமும் ஆகிய*  செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,* 
    இன்பம் இல் வெம் நரகு ஆகி*  இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்
    மன் பல் உயிர்களும் ஆகி*  பலபல மாய மயக்குக்களால்,* 
    இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று*  ஏதும் அல்லல் இலனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்பமும் இன்பமும் ஆகிய - துக்கத்திற்கும் சுகத்திற்கும் காரணமாகக் கூடிய
செய் வினை ஆய் - புண்ய பாபரூப கருமங்களுக்கு நிர்வாஹனாய்
இனிய நல்வான் சுவர்க்கங்களும் ஆய் - மிகவும் நன்றாய்ச் சிறந்த ஸ்வர்க்க ப்ரதேசங்களுக்கும் நிர்வாஹகனாய்
மன் பல் உயிர்களும் ஆகி - நித்யரான வல பிராணிகளுக்கும் நிர்வாஹகனாய்
பல பல மாயம் மயக்குக்களால் - பலவகைப்பட்ட ப்ரக்ருதி விகாரரூபமான மோஹ விகாரங்களாலே

 

விளக்க உரை

புண்யபாய ரூபகருமங்களுக்கும், அவற்றைச் சம்பாதிப்பதற்குரிய இடமான லோகங்களுக்கும், அவற்றின் பலன்களை யனுபவிக்குமிடான லோகங்களுக்கும், அப்பலன்களை அனுபவிக்குமவர்களான ஆன்மாக்களுக்கும் நியாமகனாய் லீலாரஹமநுபவிக்கின்ற எம்பெருமானை யடையப் பெற்றதனால் ஒருவகையான அல்லலும் தமக்கில்லை யென்கிறார். “துன்பமுமின்பமுமாகிய செய்வினை” என்றது- துன்பங்களுக்குக் காரணமாயும் இன்பங்களுக்குக் காரணமாயுமுள்ள செய்வினை என்றபடி. து: க்க ஹேதுவான பாபங்களையும், ஸுக ஹேதுவான புண்யங்களயும் சொன்னவாறு. புண்யபாபங்கள் எம்பெருமானிட்டவழக்கு என்றராயிற்று. “யத் த்வத்ப்ரியம் தததிஹ புண்யம் அப’ண்யமந்யத்” (அநுமாநுஷஸபுதவம்) என்றார் கூரத்தாழ்வான். உலகங்களுமாய்=புண்யபாவங்களை ஆர்ஜிக்குமிடங்களும் எம்பெருமானிட்ட வழக்கு என்றபடி. பாபங்களின் பலன்களை யநுபவிக்குமிடமான நரகமும். புண்யங்களின் பலன்களை யனுபவிப்பகுமிடமான ஸ்வர்க்கமும் முதலிய லோகங்களும் எம்பெருமானிட்ட வழக்கு என்கிறது இரண்டாமடி. வான்-சிறந்த என்படி. நரகு - வடசொற்சிதைவு.

English Translation

Through his many tricks of Maya he made the Karmas, -of pleasure and pain, -the worlds and the countless souls, the lowely Hell and the sweet Heaven. All this in his cosmic Lila-play, so I end despair and praise him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்