விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்*  எல்லா உலகும் கழிய,* 
    படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்*  உடன் ஏற திண்தேர்கடவி,*
    சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்*  வைதிகன் பிள்ளைகளை,* 
    உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி*  ஒன்றும் துயர் இலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு போழ்தில் - ஒரு அவஸரத்திலே
எல்லா உலகும் கழிய - எல்லா வுலகங்களுக்கும் அப்பால்போம்படியாக,
படர் புகழ் பார்த்தனும் - பரம்பின புகழை யுடையனான அர்ஜுநனும்
வைதிகனும் - வைதிகப்பிராமணனும்
உடன் ஏற - கூடவே ஏறி வரும்படி

 

விளக்க உரை

வைதிகன் பிள்ளைகளைக் கொணர்ந்து கொடுத்த அதிமாநுஷ சேஷ்டிதத்தை அநுஸந்தித்து, இங்ஙனே அரியன செய்தும் அடியார்களைக் காத்தருளவல்ல பெருமானைப் பற்றின வெனக்கு யாதொரு துயருமில்லையென்கிறார். மீளாவுகைமாகிய பரமபதத்திற் சென்றவர்கள் மீண்டனரென்பது எங்ஙனே கூடுமென்றே சங்கைக்குப் பெரியோர்கள் இங்குப் பலவிதாமக ஸமாதானாங் கூறுவர்கள்: அச்சிராதிமார்க்கத்தாற் சென்றவர்கள் திரும்பி வருதவில்லையென்றும், அதுவும் அவர்களுடைய சுதந்திரமான இச்சையினால் இல்லையென்றும் இங்கு முக்கியமாக வுணர்க. “உடலோடுங் கொண்டு காடுத்தவனை” என்ற விடத்தை பட்டர் உபந்யஸித்தருளும்போது “பூசின மஞ்சளும் உடுத்தின பட்டும் இட்ட சவடிப்பூணூலும் இட்ட காதுப்பணிகளுமான வொப்பனையில் ஒன்றுங் குறையாதபடி கொண்டுவந்து கொடுத்தவ” னென்றருளிச் செய்தாராம். அது கேட்டவர்கள் “இப்பிள்ளைகள் பிறந்த க்ஷணத்திலேயே கொண்டுபோகப் பட்டார்களாகவன்றோ சொல்லுகிறது; அப்போது இவையெல்லாம் இருக்க ப்ரஸக்தியில்லையே” என்று பட்டரிடம் விஜ்ஞாபிக்க. “ரிஷிபுத்திரர்களாகையாலே பிறக்கிறபோதே அவற்றோடே பிறப்பர்காணும்” என்றருளிச் செய்தாராம். ரஸோக்தியிருந்தபடி.

English Translation

With ease on the same day in the same moment he drove the chariot with Arjuna and the Brahmin, beyond all this and entered his glorious world, and gave the Brahmin his son. So I end despair and praise him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்