விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு*  சங்கொடு சக்கரம்வில்,* 
    ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்*  தண்டு கொண்டு புள் ஊர்ந்து,*  உலகில் 
    வன்மை உடைய அரக்கர்*  அசுரரை மாளப் படைபொருத,* 
    நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற*  நான் ஓர் குறைவு இலனே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பலபல - பலபல வகைப்பட்ட
சன்மம் - அவதாரங்களை
செய்து - பண்ணி
வெளிப்பட்டு - ஸம்ஸாரிகளின் கண்ணுக்கும் புலப்பட்டு
சங்கொடு சக்கரம் - சங்கு சக்கரங்களையும்

விளக்க உரை

திவ்யாயுதங்களோடே எம்பெருமான் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப் பெற்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார். சன்மம் பலபல செய்து- ‘பிறப்பிலி’ என்ற பேர்பெற்றிருக்கிற தான் கர்மவச்யனாயன்றியே க்ருபாவச்யனாய்ப் பல பலயோனிகளிலும் பிறக்கிறபடியை அநுஸந்திக்கின்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கின்றார். கர்மவச்யர்களான நம்முடைய பிறவிகட்கு எல்லை காணமுடியும்; அவனுடைய அவதாரங்கட்கு எல்லை காணப்போகாது; ஏனெனில், கருமத்திற்கு அவதியுண்டு; அநுக்ரஹத்திற்கு அது கிடையாதே; ஆதலால் “சன்மம் பலபல” என்றார். “என்றெனும் கட்குண்ணாற் காணாத அவ்வுரு” என்றபடியே புலப்படாத திருவுருவத்தைப் புலப்படுத்துகிறபடியை அநுஸந்திக்கின்றவெனக்கு ஒரு குறையில்லையென்கிறார் வெளிப்பாட்டு என்பதனால்.

English Translation

The Garuda-riding Lord with conch discus, bow, mace and dagger, took many Avataras in this fair world, to rid the world of the clannish Asuras. I am fortune-favoured to praise him and lack nothing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்