விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏற்கும் பெரும்புகழ்*  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  வண் குருகூர்ச் சடகோபன் சொல்,* 
    ஏற்கும் பெரும்புகழ்  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏற்கும் பெரும் புகழ் - தனக்கு ஏற்றிருக்கின்ற மிக்க புகழுடையனாய்
வானவர் ஈசன் - நித்யஸூரி நாதனான ஏற்கும் பெரும்புகழ் குருகூர் சடகோபன்
சொல் - அருளிச்செய்த
ஏற்கும் பெரும் புகழ் - ஏற்ற பெரும்புகழையுடைய
ஆயிரத்துள் - இவ்வாயிரத்தினுள்

 

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப் பாசுரத்தில் நான்கு அடிகளிலும் ஏற்கும் பெரும்புகழ் என்ற விசேஷணம் அமைந்திருக்கு மழகு நோக்கத்தக்கது. எம்பெருமானை உபய விபூதிநாதன் என்று சொன்னால் ஏற்றிக்குமாபோலே ஆழ்வாரை ‘எம்பெருமான் கவி இவர்’ என்றால் அப்படியே ஏற்றிருக்கும். அவ்வெம்பெருமானை உள்ளபடியே புகழும் வேதம் திருவாய்மொழிதான்’ என்றால் இதுவும் ஏற்றிருக்கும். ‘ஸ்வரூப நாசமாகப் பிறரைக் கவிபாடாமல் ஸ்வரூபம் நிறம்பெற எம்பெருமானையே கவிபாடுமாறு நியமிக்க இப்பதிகமே இவ்வாயிரத்திலுள்ளும் சிறந்தது என்றால் இதுவும் ஏற்றிருக்குமாயிற்று.

English Translation

This decad of the perfect thousand songs by famous kurugur city's Satakopan addressing Krishna, glorious Lord of the celestials, gives freedom from rebirth to those who can sing it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்