விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்றுநின்று பல நாள் உய்க்கும்*  இவ் உடல் நீங்கிப்போய்,* 
    சென்று சென்று ஆகிலும் கண்டு*  சன்மம் கழிப்பான் எண்ணி,* 
    ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்*  கவி ஆயினேற்கு,* 
    என்றும் என்றும் இனி*  மற்றொருவர் கவி ஏற்குமே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்று நின்று - இருந்து
உய்க்கும் - சேதுநனைத் தன் வசத்திலே யாக்குகின்ற
இ உடல் - இந்த சரீரத்தை
நீங்கி போய் - விட்டொழிந்து போய்
சென்று சென்று ஆகிலும் - இப்படியே பல பல ஜனன மரணங்கள் நடந்தபின்பாகிலும் (ஏதேனுமொரு காலத்தில்)

 

விளக்க உரை

தன்னைத் துதிப்பதற்கென்றே கரணகளேபரங்களைக் கொடுத்தருளினவனான எம்பெருமான் திறத்திலே கவிபாடப்பெற்ற வெனக்கு மற்றொருவரைக் கவிபாடுதல் ஏலாது என்கிறார். உலகில் க்ருஷி செய்பவன் தான் செய்த க்ருஷி பழுது பட்டொழிந்தாலும் ‘இன்னமும் ஒரு தடவை செய்து பார்ப்போம்’ என்று கொண்டு மீண்டும் மீண்டும் நசையாலே க்ருஷி தன்னையே செய்து பார்ப்பார்; அதுபோல, எம் பெருமானும் “பத்தி யுழவன்” என்று திருமழிசைப்பிரான் அருளிச்செய்தபடியே புக்திக்ருஷி செய்பவனாதலால் அந்தக்ருஷி எத்தனை தடவை முட்டுப்பட்டாலும் இன்னொரு தடவையிலாகிலும் பலிக்கமாட்டாதோ’ என்று கொண்டு மீண்டும் மீண்டும் பிரபஞ்ச ஸ்ருஷ்டியைச்செய்தருள்வானென்கிறது இரண்டரையடிகளால். நின்று நின்று பலநாளுய்க்குமிவ்வுடல் = இதனால் நம்முடைய சரீரத்தின் கொடுமையைக் காட்டினபடி காலமுள்ளதனையும் ஆத்மாவைத் தன் வசத்திலேயே இழுத்துக்கொண்டு சென்று அனர்த்தங்களுக்கு ஆளாகும்தான சரீரம் என்றவாறு. இலவுடல் என்றது இந்த ஜன்மத்திலுள்ள ஒரு சரீரத்தை கொடுமையைக் காட்டினபடி. காலமுள்ளதனையும் ஆத்மாவைத் தன் வசத்திலேயே இழுத்துக் கொண்டு சென்று அனர்த்தங்களுக்கு அளாகுமதான சரீரம் என்றவாறு. இவ்வுடல் என்றது இந்த ஜன்மத்திலுள்ள ஒரு சரீரத்தை மாத்திரம் சொன்னபடி யன்று; ஜன் பரம்பரை தோறும் தொடர்ந்துவருகிறவுடல் என்றபடி (இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்றாகிலுங் கண்டு) ஆத்மாவனாவன் சரீரத்தில் நின்றும் கிளம்பினவாறே போகக்கூடிய வழிகள் நான்கு உண்டு; 1. கர்ப்பகதி, 2.யாம்யகதி 3. தூமகதி 4. அர்ச்சிராகதி என்பனவாம். அர்ச்சிராதி என்பனவாம். அர்ச்சிராதி கதியாகச் சென்று பரமபதத்தையடைந்து தன்னை யநுபவிக்கப் பெற வேணுமென்று எம்பெருமான் பாரித்திருந்தும் இவர்கள் அந்தக் கதியிற் செல்லாமல் மற்ற மூன்று கதிகளிலேயே செல்லுகிறார்கள். அது கண்டு எம்பெருமான் நம்முடைய மனோரதம் ஈடடேறப் பெறவில்லையே, இனி, பிரபஞ்ச ஸ்ருஷ்டியை நிறுத்திப் போகட்டுவிடலாமா என்று நினைத்தருளாமல் ‘இங்ஙனமே நடந்து போகும் அனேக ஜன்ம பரம்பரைகளினுள்ளே ஏதேனுமொரு ஜன்மத்திலாகிலும் இவர்கள் அச்சிரராதிகதிக்கு வாராமற் போவார்களா? என்னேனுமொருநாள் வரக்கூடும்” என்றெண்ணி மென்மேலும் உலகம் படைக்கின்றானாம். “சோம்பாது இப்பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா” என்றார் பெரிய திருவந்தாதியிலும்.

English Translation

Considering the needs of all beings that spend long days of journey in this body, the Lord made many stations for sweet rest. Being his poet forever, can I sing for any one else?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்