விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
  நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 
  அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
  அஞ்சன வண்ணனைப் பாடிப் பற* 
  அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பஞ்சவர் - பஞ்சபாண்டவர்களுக்காக;
தூதன் ஆய் - (துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்;
பாரதம் - பாரத யுத்தத்தை;
கை செய்து - அணிவகுத்துச்செய்து,;
கஞ்சு உமிழ் - விஷத்தைக் கக்குகின்ற;

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவர்களுக்காகத் தூதுசென்றதும், பின்பு பாரத யுத்தங் கோடித்தததும், காளியன்வலியை அடக்கினதும் கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. காளியனை அடக்கியது முன்னும், பாரதம் கைது செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்று “கைசெய்து” என்றவிடத்து, கை- தமிழ் உபஸர்க்கமென்பர். நல்பொய்கை- எதிர்மறையிலக்கணை.

English Translation

As messenger for the five, he abetted the war. He went into the lake where a serpent laid spitting venom. He danced on the five hoods and showered his grace. Sing of the dark-hued Lord and swing. Sing of Yasoda’s lion and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்